எங்களை பற்றி

எமது பாசமிகு ஊரும் உறவும் அன்பர்களுக்கு எமது வணக்கம்

உறவுகளுக்கு ஒரு பாலமாகவும் பலமாகவும், அடுத்துவரும் சந்ததியினருக்கு ஒரு மையமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் உருவானதே இந்த ஊரும்உறவும். இதன் பாதை கல்லும் முள்ளும், கரடும் முரடும் கொண்ட நீண்ட தொரு நெடும்பாதை. அந்தப் பாதையில் நடப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம். இந்த பாதையில் தொடர்ந்து செயற்படுவதற்கு உங்கள் ஒவ்வொருவருடைய ஆக்கபூர்வமான ஒத்துழைப்பும், அரவணைப்பும், சிந்தனையும், செயற்பாடும் இந்தக் கட்டமைப்பான ஊரும்உறவின் நோக்கத்தில் தொடர்ந்து பயணிப்பதற்கு தேவைப்படுகிறது.

அவர் அவர்களுடைய நம்பிக்கைக்குரிய அரசியல், மதம், கோட்பாட்டுச் சிந்தனைகள், நியாய, அநியாயங்கள், அடையாளங்கள், அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் சார்ந்து இயங்குவதே சமூகம்.

அச்சமுகத்தின் எல்லா உறவுகளையும் தொடர்புகொண்டு, அரவணைத்துக்கொண்டு ஒரு தளத்தில் செயற்படுவதே ஒரு கடினமான முயற்சி. இந்த முயற்சியில் வடம் பிடித்துக் கொண்டு இந்த ஊரும் உறவையும் பலப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஊரும்உறவின் ஒருங்கிணைப்புக்குழு, பலரின் வேண்டுகோளிக்கிணங்க தகவல்களை மட்டும் பரிமாறிக்கொள்ளும் தளமொன்றை உருவாக்கியுள்ளது.மிகவிரைவில் அதில் எல்லோரையும் இணைத்துக்கொள்ளுவோம்.

தற்போது பயன்பாட்டில் உள்ள தளம் தொடர்ந்து எமது கலை, பண்பாடுகள், மொழி அடையாளத்தை வளர்ப்பதற்கான கருத்துக்களை ஆக்கபூர்மாக பகிர்ந்து கொள்ள பாவனையில் இருக்கும்.அதற்கு வேண்டிய ஆக்கங்களையும் தகவல்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

எஸ். ஆனந்தன்.

தொடர்புகளுக்கு

oorum.uravum@gmail.com

Loading

Spread the love