உருளைக்கிழங்கு (Solanum tuberosum)நன்மைகள், தீமைகள் அழகு குறிப்பு

Visits of Current Page:602
GlobalTotal: 307715

உலகில் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கைத்தான். காய்கறிகளில் பலரும் விரும்பி சாப்பிடும் ஓன்று தான் உருளைக்கிழங்கு. சிலர் இந்த உருளைக்கிழங்கை பலவாறு சமைத்து சாப்பிட விரும்புவார்கள்

சொந்தமாகத் தனிப்பட்ட எந்த ஒரு சுவையையும் பெற்றிராத இந்தக்கிழங்கு இயற்கையிலேயே முறைப்படியாக உணவு ஊட்டத்துடன் வளர்ச்சி பெற்று நமக்குக் கிடைக்கிறது என்று கூறிச் சத்துணவு நிபுணர்களும், விஞ்ஞானிகளும் வியக்கின்றனர். தண்ணீராலும், மாவுப் பொருளாலும் பருத்திருக்கும் ஒரே காய்கறி இதுதான்.

Skin on Roast Potatoes -

அதே சமயம் பலருக்கும் இந்த உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது நல்லதா அல்லது தோல் நீக்கி சாப்பிடுவது நல்லதா என்ற சந்தேகம் இருக்கும்.உருளைக்கிழங்கு மாவுப் பொருள். அதனால் இதில் உள்ள எந்தச் சத்தும் அழியாமல் கிடைக்கிறது. கைக்குத்தல் அரிசிக்கு இணையான சக்தி தோலுடன் சாப்பிடப்படும் உருளைக்கிழங்கில் கிடைக்கிறது. உருளைக்கிழங்கில் தோலுக்கு அருகில் தான் அதிக அளவு ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் தாது உப்புகளும் உள்ளன. எனவே, தோலுடன் வேக வைத்தே சாப்பிட்டால் உருளைக்கிழங்கில் உள்ள அனைத்துச் சத்துணவையும் மருத்துவக் குணங்களையும் முழுமையாகப் பெறலாம்.வாயுப்பொருள் என்று ஒதுக்காமல் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடாமல் மற்றவகைகளில் உருளைக்கிழங்கை சமைத்துச் சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வைத் தொடர்ந்து பெறுங்கள்.உருளைக்கிழங்கு உயர்தரமான சத்துணவு கொண்ட காய்கறி ஆகும். 100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். மேலும் 100 கிராம் கிழங்கில் 22.6% கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே உடலுக்கு உடனே சக்தி கிடைத்து விடுகிறது. புரதம் 1.6% உள்ளது. பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ, பி, சி முதலியவையும் போதிய அளவில் உள்ளன. வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான சுண்ணாம்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளன. உங்கள் உடலில் அதிகமாகப் புளிப்பு அமிலங்கள் சேர்ந்தால் அவைகளை இது வெளியேற்றிவிடுகிறது

உருளைக்கிழங்கு தீமைகள்

அன்றாடம் உண்ணும் உணவான உருளை கிழங்கிலும், சில தீமைகள் உள்ளது. ஆனால் இது குறித்து யாரும் தெரிந்துக்கொள்வதில்லை. சாதாரணமாக உருளை கிழங்கு ஒரே நிறத்தில் இருந்தால் அதில் எந்த ஆபத்தும் இல்லை.

அதற்கு மாறாக, உருளை கிழங்கு பச்சை நிறத்தில் மாறி இருந்தால் அதை சாப்பிடக்கூடாது.

Green Potatoes are Poisonous - Facts Analysis - Hoax Or Fact

இதில் தான் ஒளிந்திருக்கிறது ஆபத்து. சூரிய ஒளிப்படும் இடங்களில் அதிக நேரம் இருப்பதால் உருளைக்கிழங்கு மீது பச்சை நிறத் திட்டுகள் உண்டாகிறது. இதில் கிளைகோல்கலாய்ட் இருப்பதால், இது தீங்கான ஒன்றாக மாறுகிறது. இதை சாப்பிடும் போது நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.உருளைக்கிழங்கு உண்ணுவதில் சிறு அச்சமும் இருக்க வேண்டும். பச்சை உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை உடையது. அதே போல் உருளைக்கிழங்கின் இலைகள் மற்றும் பழங்களும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. அதில் ஓலனைன், சாக்கோனைன் மற்றும் ஆர்செனிக் போன்ற அல்கலாய்டுகள் உள்ளதால், இவை அதிக அளவு உடலினுள் சென்றால் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

Can you really be poisoned by green or sprouting potatoes?

நச்சுப்பொருட்கள் உள்ள முளை வந்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும்போது தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, டயேரியா போன்றவை ஏற்படும். முதலில் பலவீனமாக இருக்கும், பின் கோமா நிலையை அடைந்து அரிதாக சிலருக்கு மரணம் கூட ஏற்படும் அபாயம் உண்டு. மேலும் கருவுற்ற தாய்மார்கள் கண்டிப்பாக இவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது என வலியுறுத்துயுள்ளனர் மருத்துவர்கள்.

அழகு குறிப்பு

சரும பாதுகாப்பு வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் , ஜிங்க் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. மேலும், பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும். வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.
வயிற்றுக் கோளாறு :

வாயுப் பிரச்னை, வயிற்றில் அதிக ஆசிட் உருவாக்கத்தால் நெஞ்சு எரிச்சல் இருந்தால் ஒரு கிளாஸ் உருளைக்கிழங்கு சாறு குடித்தால் எல்லாம் பறந்துபோகும். இதை ஆய்வுகள் கூட உருளைக் கிழங்கு சாறு அல்சருக்கு நல்லது என பரிந்துரைக்கிறது.
கருவளையம் :

நுரையீரல் , சிறுநீரம் பாதிக்கப்பட்டிருந்தால் அதை வெளிப்படுத்தும் விதமாக கண்களுக்குக் கீழ் கருவளையம் வரும் என்பார்கள். அந்த வகையில் அதை சரி செய்ய உருளைக்கிழங்கு சாறு நல்ல மருந்து.
சரும அழகு :

கண்கள் வீக்கம், முகம் வீங்கியது போல் இருந்தால் உருளைக்கிழங்கு சாறை தடவி ஓய்வு எடுத்தால் போதும் சரியாகிவிடும் அல்லது ஒரு கிளாஸ் சாறை குடித்தால் இன்னும் நல்லது.
அலர்ஜி , சொரி ,சிரங்கிற்கு நல்லது : கைகள் சொரி, சிரங்கால் அரிப்பு, அலர்ஜி ஏற்பட்டிருந்தால் அதன் மீது உருளைக்கிழங்கு சாறை தடவினால் அரிப்பு, எரிச்சல் நீங்கும்.

யாழ்பாணத்து கல்யாண வீடுகளில் சமைக்கின்ற உருளைக்கிழங்கு குழம்பு செய்வது எப்படி

பார்வையிட இங்கே சொடுக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *