உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறை நூலக ஆதரவில் இயங்கும் சிறுவர் முன்பள்ளியின் விழா 2022

கொம்மந்தறை நூலகத்தில் வைகாசி மாதம் 7ம் திகதி முன்பள்ளி வழாகத்தில் கொம்மந்தறை நூலக ஆதரவில் இயங்கும் முன்பள்ளி சிறுவர்களின் விளையாட்டுப் போட்டியும், சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டும் பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. மாலை 3 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சிறியவர்களின் விளையாட்டுப் போட்டி மாலை 6 மணிவரை நீடித்தது. அதன் பின் 8 மணிவரை மாணவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றது.

இதில் தலைவராக பொ.சிறிகரன், பிரதம விருந்தினராக முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு க.சத்தியசீலன்,சிறப்பு விருந்தினர்களாக மனோன்மணி அம்மன் ஆலய குருக்கள் சிவ.ஸ்ரீ.இ.பாலகிருஸ்ணர், அதிபர் யாழ்/கம்பர்மலை வித்தியாலையம் திரு வ.இரமணசுதன், கரவெட்டி கோட்டம் முன்பள்ளி பணிப்பாளர் திருமதி பா.கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


சிறுவர் விளையாட்டுப் போட்டியில் 20க்கு மேற்பட்ட பிள்ளைகள் கலந்து கொண்டனர். இவர்களில் சிலர் பழைய முன்பள்ளி மாணவர்கள் ஆகும். இவர்களுடன் பெற்றோரும் சில போட்டிகளில் கலந்து கொண்டது உற்சாகமாக எல்லோராலும் வரவேற்கப்பட்டது. 2020 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழாவானது கடந்த வருடம் கோவிட் நோய் பரவல் காரணமாக நடைபெறவில்லை. இளையவர்களுக்கான உற்சாகமும் ஊக்கமும் கொடுக்கப்பட வேண்டும் என்ற பலரது வேண்டு கோளுக்கிணங்க இம்முறை இன் நிகழ்வு நடைபெற்றது.

இதில் யா/கம்பர்மலை வித்தியாலயம் பாடசாலையின் கா.போ.தா பரிட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கும் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கும் பாராட்டும் பரிசில்களும் வழங்குவதென்பது பிரதான நிகழ்வாகும். அத்துடன் தேசிய, மாவட்ட அளவிலான சித்திகள் பெறுவோரும், விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களும் இன் நிகழ்வின் மூலம் ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.


இம்முறை கடந்த வருட மாணவர்களும் இந்த வருட மாணவர்களும் சேர்த்து அழைக்கப்பட்டனர். சுமார் 40க்கு மேற்பட்ட மாணவர்கள் பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர். அத்துடன் சில நிகழ்வுகளும் பாட்டு, பரதநாட்டியம்,

பேச்சு போன்றவற்றிலும் மாணவர்கள் பங்குபெற்றனர். இன் நிகழ்வில் பெற்றோரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டது மாணவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைந்தது,

சிறுவர் பூங்காவும் வளாகத்தில் இருப்பதால் இளையோர் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.
இவ்விளையாட்டு மைதானமும் பூங்காவும் அமைந்த இடம் மிகவும் கிடங்கான காட்டுமரங்கள் நிறைந்த பகுதியாகவே இதுவரைகாலமும் இருந்தது. இதை பயனுள்ளதாக மாற்றுவதற்கு கொம்மந்தறை நூலகம் பெரும் முயற்சியெடுத்து இன்று ஓர் சிறுவர்களுக்கான பூங்கா, விளையாட்டு மைதானத்துடன் உருவாக்கியுள்ளது. இது எமது இளையோருக்கு பயனுள்ளதாகவும், சந்தோசமான பொழுதுபோக்கு இடமாகவும் அமைந்துள்ளது.


எமது யா/கம்பர்மலை வித்தியாலயம் பாடசாலையானது கல்வியில் பல சிறப்பான சாதனைகளை கடந்த காலத்திலும் இப்போதும் நிகழ்த்தி வருகிறது. பல கல்விமான்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் என ஒரு அறிவியல் சமூகம் ஒன்றை சுற்றமுள்ள கிராமங்களில் உருவாக்கி வருகின்றது. இதில் தேசிய அளவில், மாவட்ட அளவில் உயர் சித்தி பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2020ம் வருடம் 9A எடுத்த திலீபன் கயலோன் மாணவன் சிறப்பு சித்தி பெற்றுள்ளார். 2021இல் 17மாணவர்கள் A/L பரீட்சையில் பங்கு பற்றி 14 மாணவர்கள் A/L படிப்பதற்கு தகுதி பெற்றுள்ளார்கள். கரவெட்டி கோட்டத்தில் விகிதாசார அடிப்படையில் முதன்மை பாடசாலை என்ற இடத்தில் இருப்பது எல்லோருக்கும் பெருமையான விடையமாகும். மற்றும் 5ம் வகுப்பு 2020ம் ஆண்டு தேசிய பரீட்சையில் (கொலசிப்) கரவெட்டி கோட்டத்தின் உயர்புள்ளியாகிய 192 என்ற புள்ளியை எடுத்து கணேசலிங்கம் கஜானன் என்ற மாணவன் சித்தி பெற்றுள்ளார். இரண்டாவது புள்ளியாகிய 191 என்ற புள்ளியை செந்திநாதன் துவாகரன் பெற்று சித்தியடைந்துள்ளார்.


பாடசாலையின் சிறப்பான செயற்பாடுகள் மாணவர்கள் பெற்றோரின் ஆர்வம் ஒத்துழைப்பு என்பன மாணவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றது. இவற்றை அடைவதற்கு இன்றைய அதிபர் திரு வ.இரமணசுதன் அவர்களின் செயற்பாடு முயற்சிகளையும் பாராட்ட வேண்டும்.
எதிர்காலத்தில் இளையோரை ஊக்கப்படுத்துவதில் எல்லோரும் பங்குபற்றி அவர்களின் வெற்றிக்கும் எதிர்காலத்திற்கும் உறுதுணையாக இருக்க எல்லோரும் முன் வரவேண்டும்

தகவல்: கொம்மந்தறை சனசமூக நிலையம்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *