உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என கண்டறிவது எப்படி?

தற்போதைய மார்கெட்டில் ஸ்மார்போன்களின் விற்பனை அதிகமாகவே உள்ளது. பயன்படுத்துவர்களி என்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பல நூதனமான செயல்பாடுகளால், பல ஆப்ஸ்கள் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை கொண்டு பணம் பறித்து வருகின்றனர். இதையடுத்து, உங்கள் ஸ்மார்போனை ஹேக்கர்கள் பயன்படுத்துவதை எப்படி கண்டறிவது என்பதை பற்றி பார்ப்போம்…

 • உங்கள் சாதனத்தின் பேட்டரி வழக்கத்தை விட வேகமாகக் குறைந்தால், தீம்பொருள் மற்றும் மோசடி பயன்பாடுகள் தீங்கிழைக்கும் குறியீட்டைப் பயன்படுத்துகின்றன என்று பொருள்.
 • இவை அதிக சக்தியை எடுத்துக்கொள்ளும். இருப்பினும், நீங்கள் ஹேக் செய்யப்பட்டீர்கள் என்ற முடிவுக்கு வருவதற்கு முன், பின்னணியில் இயங்கும் பயன்பாடுகளின் எண்ணிக்கையைச் சரிபார்க்கவும்.
 • அடுத்து, பின்னணியில் இயங்கும் பல பயன்பாடுகளும் பேட்டரி ஆயுளை குறைக்கின்றன என்பதும் உங்கள் போனின் பேட்டரி ஆயுள் வேகமாக குறைய ஒரு காரணமாக இருக்கலாம்.
 • எனவே, முதலில் அவற்றை எல்லாம் மூடி, பின்னர் மீண்டும் உங்கள் ஸ்மார்ட்போன் சாதனத்தில் சார்ஜ் எவ்வளவு வேகமாக குறைகிறது என்பதை நீங்கள் கண்காணித்து ஒரு முடிவிற்கு வரலாம்.
 • உங்கள் ஸ்மார்ட்போனில் உங்களால் அடையாளம் காணப்படாத அல்லது நீங்கள் பதிவிறக்கம் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கும் மொபைல் ஆப்ஸ்களை காண்கிறீர்கள் என்றால், அதில் எதோ ஆபத்து ஒளிந்துள்ளது என்று அர்த்தம்.
 • இது ஒரு ஹேக்கர் வேலையாகவோ அல்லது ஸ்பைவேரின் வேலையாகவோ இருக்கலாம் என்பதைக் கவனத்தில்கொள்க. உங்கள் ஸ்மார்ட்போன் திடீரென்று மெதுவாகிவிட்டது என்று நீங்கள் எண்ணினால், உங்கள் சாதனத்தைச் சோதனை செய்வது கட்டாயம்.
 • உங்கள் சாதனம் மந்தமாகச் செயல்படுகிறது, அதிக டேட்டா மற்றும் பேட்டரி சக்தியையும் பயன்படுத்துகிறது என்றால் பின்னணியில் திருட்டுத்தனமாக தீம்பொருள் இயங்கிக்கொண்டு இருக்கலாம்.
 • உங்கள் டேட்டா பயன்பாடு திடீரென்று அதிகரித்துள்ளது, இது இயல்பை விட அதிகமாக உள்ளது என்றால் தீங்கிழைக்கும் பயன்பாடுகள் அல்லது மென்பொருள் உங்கள் சாதனத்தில் மறைமுகமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
 • ஸ்பைவேர்கள் பயனர்களின் செயல்பாடுகள் என்ன என்பதைக் கண்காணிக்கும்போது உங்கள் மொபைல் டேட்டா பின்னணியில் இருமடங்காகப் பயன்படுத்துகின்றது. உங்கள் ஸ்மார்ட்போன் வித்தியாசமாகச் செயல்படுகிறது, பயன்பாடுகள் எதிர்பாராத விதமாகச் செயலிழக்கின்றன அல்லது திடீரென கிராஷ் ஆகிறது என்றால் எதோ பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது என அர்த்தம்.
 • பிரௌஸ் செய்யும் போது பல தளங்கள் வழக்கமாக இருப்பதை விட வித்தியாசமாகத் தெரிகின்றன என்றால் நீங்கள் கவனமாக இருப்பது அவசியம்.
 • மேலும், உங்கள் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவில் ஏராளமான பாப்-அப் செய்திகள் தோன்றுவதை நீங்கள் கவனிக்கிறீர்கள், இது ஆட்வேர் (adware) காரணமாக இருக்கலாம், இது உங்கள் சாதனத்தை விளம்பரங்களால் மூழ்கடிக்கும் தீங்கிழைக்கும் மென்பொருளின் ஒரு வகை என்பது குறிப்பிடத்தக்கது.
 • அத்தகைய இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் புகைப்பட கேலரியில் நீங்கள் கிளிக் செய்யாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் பார்த்தால் உஷாராக இருங்கள். உங்கள் கேமராவின் மீது யாராவது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இது இருப்பதால், பாதுகாப்பாக இருங்கள்.
 • உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் பயன்படுத்தாதபோது கூட ஃபிளாஷ் லைட் தானாகச் செயல்படுகிறது என்றால் நீங்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று அர்த்தம். இந்த விளைவிற்கான பின்னணியில் யாரோ உங்கள் சாதனத்தைத் தொலைவிலிருந்து கட்டுப்படுத்துகிறார்கள் என்பதனால் இது நிகழலாம்.
 • பல மணிநேரங்கள் கேமிங் செய்வது, மற்ற பயன்பாடுகளை இயக்குவது போன்ற நீண்ட கால பயன்பாட்டில் சாதனங்கள் வெப்பமடையும். இருப்பினும், நீங்கள் பயன்படுத்தாதபோதும் உங்கள் ஸ்மார்ட்போன் மிகவும் சூடாக இருக்கிறது என்றால், ஹேக்கர்கள் பணியில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
 • உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் டயல் செய்யாத அழைப்புகளின் எண்கள் மற்றும் நீங்கள் டைப் செய்து அனுப்பாத மெசேஜ்கள் போன்ற சில நடவடிக்கைகளைக் காண்கிறீர்கள் என்றால் நீங்கள் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளீர்கள் என்பது பொருள். இப்படியான நிகழ்வுகள் ஹேக் செய்யப்பட்டதற்கான மற்றொரு சாத்தியமான அறிகுறியாகும்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *