ஈஸ்டர் பண்டிகை வரலாறு..

Visits of Current Page:616
GlobalTotal: 307674
Why do we eat chocolate eggs at Easter? | NationalWorld

கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 29 ஆம் நூற்றாண்டிலிருந்து உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாக வரலாறு கூறுகிறது. மரணத்திலிருந்து இயேசு கிறிஸ்து விடுதலை பெற்று உயிர்த்தெழுந்த நிகழ்வை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற கிறிஸ்தவச் சபைகளிலும் பாஸ்கா திருவிழிப்பு என்ற பெயரில் நினைவு கூறும் ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது.

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை மாலை அல்லது இரவில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கல்வாரி மலையில் சொல்ல முடியாத அளவு துயரத்தில் முள் கிரீடம் சூட்டப்பட்டு சித்திரவதைக்குள்ளான போதும் தனக்கு தண்டனை அளித்தவர்களை மன்னிக்க வேண்டி இறைவனிடம் மன்றாடினார்.“இறைவா இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும்” என வேண்டிக் கொண்டார். இந்த இறை குணம் மனிதனுக்கும் வர வேண்டும் என்பது அவரின் எண்ணம். ஆனால் எந்த குற்றமும் செய்யாத நிலையிலும் இயேசு பிரானை சிலுவையில் அறைந்தனர்.

சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்த ஏசுபிரான் அன்றிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அந்நாள் ஈஸ்டர் தினமாக கொண்டாடப்படுகிறது.ஈஸ்டர் தினமான நன்னாளில் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்த்தெழுந்தார் என்று மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கின்றனர். ஈஸ்டர் பண்டிகை ஒரு வசந்த கால தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது.

இந்த மாதத்தில் ஈஸ்டர் மணிகள் என்ற மலர்கள் பல நிறங்களில் பூத்துக்குலுங்கி மகிழ்விக்கும். இந்த பண்டிகையின் முக்கிய அம்சம் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள்.பண்டைய காலங்களில் வர்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இன்றைக்கு சாக்லேட் போன்ற உண்ணக்கூடிய பொருட்களால் ஈஸ்டர் முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படுகிறது. அதிக முட்டைகளை கண்டறியும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

வசந்தகாலத்தில் மீண்டும் பிறப்பதை முட்டையால் அடையாளம் காட்டப்படுகிறது. முட்டையானது புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. முட்டை அடைக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புதிய வாழ்வின் குறியீடாக கருதப்படுகிறது. மிகவும் பாரம்பரியமான கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் முட்டை என்பது விரதத்தை முடிக்கும் கொண்டாட்டம் மட்டுமன்றி இயேசு மீண்டும் பிறப்பதற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது.பாரம்பரியமாக ஈஸ்டர் முட்டைகள் சிவப்பு நிறம் பூசப்பட்டு வருகிறது.

அது இயேசு சிலுவையில் சிந்திய ரத்தத்தைக் குறிக்கிறது. அதனுடைய கடின ஓடு கிறிஸ்துவின் மூடப்பட்ட கல்லறையையும் அதனை உடைப்பது மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது. சிலுவையில் அறையப்பட்டு மரணித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த வரவிற்காக கொண்டாடப்படும் பண்டிகை ஈஸ்டர் திருநாளில் அகத்தின் மரணத்தை வென்று நிஜ வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்குகிறது.அஞ்ஞானத்தில் இருந்து விடுதலை பெற்று ஆன்மீகத்தை உணர்த்திய சாகாவரம் இந்த ஈஸ்டர் பண்டிகையாகும்.

ஈஸ்டர் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் விழாவுக்கு டிசம்பர் 25 என்று நிலையான ஒரு நாள்
குறிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஈஸ்டர் திருநாள் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும்.

கிபி 325 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏறத்தாழச் சரியாக இருக்கக் கூடிய
பெளர்ணமி தினங்களை
வானவியலாளர்கள் கிறீஸ்தவ தேவால யத்திற்காக அமைத்துக் கொடுத்தனர்.

அவற்றை தேவாலயம் தொடர்பான பெளர்ணமி (Ecclesiastical Full Moon) என்று
அழைத்தனர். மார்ச் 21ம் தேதி அதாவது சூரியன் நிலக்கோட்டுக்கு எதிராக
வரும் நாளில், அல்லது அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் வரும்
பெளர்ணமியின் அதாவது பாஸ்கல் (paschal) பெளர்ணமியின் பின் வரும் ஞாயிறில்
ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது.

அதனால் மார்ச் 22ம் தேதிக்கும் ஏப்பிரில் 25ம் தேதிக்கும் இடையில்
ஈஸ்டர்வரலாம்.

இஸ்ரேல் மரபுகள் ஆழமாக வேரூன்றிய இடங்களில் உள்ள கிறீஸ்தவ தேவாலயங்கள்
ஈஸ்ரரை யூதர்களின் Passover (பஸ்கா) க்கு அமைவாகவே கொண்டாடுகின்றன.

ஈஸ்டர் காலத்தில் பின்பற்றப்படும் சில வழக்கங்கள் கிறீஸ்த வத்திற்கு
முந்திய சமயத்தைச் சார்ந்தவையாகும்.

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில அறிஞரான St. Bede என்பவர் ஈஸ்ரர் என்ற சொல்Scandinavia Ostra (ஸ்கந்திநேவிய ஓஸ்றா) என்ற சொல்லில் இருந்தோ, அல்லது
இளவேனில் கால சூரியன் நில நடுக்கோட்டுக்கு எதிராக வரும் காலத்தில்,
வஸந்தத்தையும் வளத்தையும் குறிக்கும் வகையில் விழா எடுக்கப்பட்ட பெண்
தெய்வங்கள் இருவரைக் குறிக்கும் Teutonic சொற்களான Ostern அல்லது Eostre
ஆகிய சொற்களிலிருந்தோ வந்திருக்கலாம் என்று கூறுவதை பொதுவாக அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

ஈஸ்டர் நாடுகளுக்கு நாடு வேறுபட்ட விதங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இங்கிலாந்தில்

ஈஸ்ரரின் போது முட்டைகள் மற்றும் பணம், ஆடைகள், சொக்கலேற்றுகள் போன்ற
பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வார்கள். அல்லது ஒன்றாக விடுமுறையில்
செல்வார்கள். சிலர் ஈஸ்ரர் கூடைகளைச் செய்து அதனுள் daffodils (பேரரளி
)மலர்கள் அல்லது சிறிய சொக்கலேற் முட்டைகளை வைப்பர்கள்.

ஈஸ்டர் முயல் இங்கிலாந்தின் ஈஸ்டர் மரபுடன் இணைந்ததொன்று. கடைகளில்
ஆயிரக்கணக்கில் நிறைந்திருக்கும் இவற்றை வாங்கி ஒருவருக்கொருவர்
பரிசளித்துக் கொள்வார்கள். இந்த சொக்கலேற் முயல்களை வீடுகளில் ஒளித்து
வைத்து தேடி எடுக்கும் பிள்ளைகள் பரிசுகள் பெறுவதும் இங்குள்ள மரபுகளில்
ஒன்று.

பெரிய வெள்ளியன்று காலை hot cross buns(பணிஸ்) உண்ணப்படும். ஈஸ்ரரின்
முன் இவை கடைகளில் விற்பனைக்கு வந்துவிடும்.

பிரான்ஸ்

ஈஸ்ரர் Paques என்று அழைக்கப்படுகிறது. பெரிய வெள்ளி தொடக்கம்
கொண்டாட்டம் துக்கத்துடன் ஆரம்பமாகும். அன்றிலிருந்து ஈஸ்டர் ஞாயிறு வரை
தேவாலய மணிகள் ஒலிக்காது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிகழ்ச்சிக்கு
துக்கம் அனுஷ்டிப்பதைக் குறிக்கும் அடையாளமாக இந்த மணி ஒலிப்பது
நிறுத்தப்படுகிறது.

ஈஸ்டர் அன்று காலையில் மணி ரோமிலிருந்து திரும்பிப் பறந்து வருவதாக உள்ள
ஐதீகத்தின் படி அதைப் பார்ப்பதற்காக பிள்ளைகள் தோட்டத்திற்கு விரைந்து
சென்று மணியைப் பார்க்க வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்க பெரியவர்கள்
சொக்கலேற் முட்டைகளை ஒளித்து வைப்பதில் ஈடுபடுவார்கள்.

இத்தாலி

ஈஸ்டர் La Pasqua எனப்படுகிறது. பெரிய விருந்துடன் இங்கு ஈஸ்ரர்
கொண்டாடப்படுகிறது. வாட்டப்பட்ட குட்டி ஆட்டு இறைச்சியிலாலான Angellino
எனப்படும் ஈஸ்ரர் சிறப்பு உணவு இதில் பரிமாறப்படும்.

பல வண்ண இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்டு மகுட வடிவில் ஈஸ்ரருக்காகச்
சிறப்பாகத் தயாரிக்கப்படும் பாணை பிள்ளைகள் உண்பார்கள்.

ஜேர்மன்

ஈஸ்டர் (Ostern )(ஓஸ்டன் ) எனப்படுகிறது. இந்தப் பெயர் வசந்த தெய்வமான
Eostre என்ற பெயரிலிருந்து உருவாகியிருக்கலாம். பெரிய வெள்ளியன்று பலர்
மீன் உணவை உண்பார்கள். ஈஸ்டர் சனியன்று மாலையில் பெரிய தீ
வளர்க்கப்படும். அதனைக் காணப் பலர் கூடுவார்கள்.

குளிர் கால முடிவினையும் கெட்ட உணர்வுகளையும் குறிக்கும் வகையில் இந்த தீ
வளர்க்கப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறன்று குடும்பங்கள் ஒன்றாக இணைந்து சிறந்த
காலை உணவை உண்பார்கள். பின்னர் பெற்றோர் இனிப்புகள், முட்டைகள், சிறிய
பரிசுப் பொருட்களைக் கொண்ட கூடைகளை பிள்ளைகள் தேடிக் கண்டு பிடிப்பதற்காக
ஒளித்து வைப்பார்கள். கைகளால் வர்ணமூட்டப்பட்ட முட்டைகளை நண்பர்கள்
ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள்.

முன்னர் கிராமப் பெண்கள் தமது காதலருக்கு சிவப்பு நிறமூட்டப்பட்ட
முட்டையைப் பரிசளிப்பது வழக்கமாக இருந்தது. இது இப்போது அருகி மறைந்து
விட்டது.

நெதர்லாந்து

ஈஸ்டர் Pasen அல்லது Pasen Zontag என்று கூறப்படுகிறது. முழு நாட்டிலும்
ஈஸ்டர் ஒரு வசந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மலர்களாலும்
நிறமூட்டப்பட்ட முட்டைகளாலும் ஈஸ்ரர் இராப்போசன விருந்து மேசைகள்
அலங்கரிக்கப்படுகின்றன. ஈஸ்ரர் விருந்தில் முந்திரியவற்றல்களால்
நிறைக்கப்பட்ட இனிப்புப் பாண் சிறப்பிடம் பெறுகிறது.

சுவீடிஸ்

ஈஸ்டர் நாள் påskdagen எனப்படுகிறது. ஈஸ்ரவிருந்து களிலும்
விளையாட்டுகளிலும் வாழ்வினதும்
புதுப்பித்தலினதும் சின்னமாக விளங்கும் முட்டை இடம்பெறுகிறது. ஒவ்வொரு
வீடுகளிலும் முட்டைக்கு நிறமூட்டும் விழாக்கள் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *