ஆரோக்கிய வாழ்வுக்கு உணவுப் பழக்கங்கள்!

Visits of Current Page:717
GlobalTotal: 311069

மனிதனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிகப் பிரதானம் உணவாகும். உணவின்றி நாம் உயிர் வாழ முடியாது. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுதல் போன்ற காரணங்களால் பல்வேறு வகையான உபாதைகள் ஏற்படுகின்றன. சுகாதாரப் பழக்கங்களை கடைப்பிடிக்காமை, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு உண்ணாமை போன்ற காரணங்களால் நோய்கள் ஏற்படுகின்றன.

எனவே சிறந்த உணவுப்பழக்கங்களை நாம் கடைப்பிடிப்பதோடு சுகாதார பழக்கங்களை கடைப்பிடிக்கவும் வேண்டும்.

தேவையான அளவு உணவுகளை உட்கொள்ளாததால் நிறைவு குறைவு, குருதிச் சோகை ,வளர்ச்சி குன்றுதல், போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அதிக அளவு உணவு உட்கொள்வது (சீனி, உப்பு , தரமற்ற பதனிடப்பட்டஉணவுகள்) காரணமாக அதிக உடல் நிறை, உடல் பருமனடைதல், தொற்றா நோய்கள்(நீரிழிவு இருதய நோய்,புற்றுநோய் சிறுநீரக நோய்கள்) ஏற்படுகின்றன.

தேவையான அளவு மரக்கறி, பழ வகைகளை உட்கொள்ளாமை காரணமாக உயிர்ச்சத்துக் குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், குறைவான கல்விச் செயல்பாடுகள், பார்வைக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

உணவு வேளைகளைத் தவிர்த்து கொள்வதால் போசாக்கு குறைபாடு,குடற்புண், உடற் செயல்பாடு மந்தமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எனவே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மனிதன் கடைப்பிடிப்பதன் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை அவசியம் உண்ண வேண்டும்.எனவே நாம்ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு மாற வேண்டும்.

இவ்வாறு மாறும் போது நாம் உடலாரோக்கியம் உள்ளவர்களாக வாழ முடியும்.

பல்வேறு வகையான உணவுகளை தேவையான அளவுகளில் பரிந்துரைக்கப்பட்ட வகையில் உண்ண வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை நாளாந்தம் நாம் தெரிவு செய்தல் வேண்டும்.நாம் நாளாந்தம் மூன்று பிரதான உணவு வேளைகளில் உணவை உட்கொள்கின்றோம்.

தானியங்கள், கிழங்கு வகைகள் உணவுத் தட்டில் அரைப்பங்கு இருக்க வேண்டும். மரக்கறி வகைகள் உணவுத் தட்டில் ( மிகுதிபாதி 2/3 பங்கு) இருக்க வேண்டும். மீன், அவரை வகைகள், முட்டை, இறைச்சி (பாதி உணவுத் தட்டில் 1/3பங்கு) இருக்க வேண்டும்.

கொழுப்பு எண்ணெய், எண்ணெய் விதைகள் ஓரளவு சேர்க்க வேண்டும்.பழவகைகள் (குறைந்தது ஒரு நாளைக்கு இரு தடவை), பால் உற்பத்திப் பொருட்கள் உணவில் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் சிறிதளவு உண்ணுவது சிறந்தது. ஒவ்வொரு உணவு வகையிலும் வெவ்வேறு போசணைப் பொருட்கள் காணப்படுகின்றன. அப்போசணைப் பதார்த்தங்கள் எவை என்பதை நாம் அறிந்து திட்டமிடுதல் வேண்டும்.

எந்த உணவு முறை ஏற்றது? - The different diet to follow | பெமினா தமிழ்

கனியுப்புக்கள், விற்றமின்கள், நார்ச்சத்துக்கள் போன்றவற்றை வழங்கும் பிரதான உணவு மரக்கறிகளாகும். கங்குன், வல்லாரை, முருங்கையிலை, பசளி, அகத்தி, பொன்னாங்காணி, கரட், பீட்ரூட்,பூசணி,வெண்டிக்காய், கத்தரிக்காய், தக்காளி, வாழைக்காய் போன்றவற்றில் போசணைகள் காணப்படுகின்றன.

சரிவிகித உணவே ஆரோக்கியம் | Food is health - hindutamil.in

விலங்கு உணவுகளான மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றில் உயர்தரப் புரதச்சத்துள்ளது. இவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். கொழுப்பு எண்ணெய் வகைகள் எமது உடல் வளர்ச்சிக்கும் தொழிற்பாட்டிக்கும் அவசியமானதாகும். எனினும் இவற்றின் மேலதிக பாவனையானது தொற்றா நோய்களை ஏற்படுத்தும்.

எண்ணெய்த் தன்மையான வித்துகளில் ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, விற்றமின்கள், கனியுப்புகள் அடங்கியுள்ளன. இது இதயத்திற்கு நல்லது இவற்றில் நல்ல கொலஸ்ட்ரோல் அடங்கியுள்ளது.

மருந்தாகும் உணவு வகைகள் | Webdunia Tamil

பழங்கள் விற்றமின்கள், கனியுப்புகள், நார்ச்சத்துகளை கொண்டவை. பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களில் காபோவைதரேற்று, புரதம், கொழுப்பு, கல்சியம், கனியுப்புக்கள், விற்றமின்கள் உள்ளன. எனவே ஆரோக்கியமான, சமபோசாக்கான உணவுகளை உண்பதால் ஆரோக்கியமாக வாழலாம்.

ஆரோக்கியமான தூக்கம்

தூக்கமின்மை உடல் ஆரோக்கி யத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடிய அம்சமாக இருக்கிறது. போதுமான தூக்கம் இல்லாதவர்கள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியம் அதிகம். பெரியவர்களுக்கு அன்றாடம் 7 அல்லது 9 மணி நேரத் தூக்கம் அவசியம் தேவை

தூக்கம் ஏன் அவசியம்? | Why sleep is necessary - Dinakaran

ஆனால், காலையில் உங்களால் நினைத்த நேரத்துக்கு எழுந்துகொள்ள முடியாமல் தொடர்ச்சியாகச் சிரமப்பட்டால் உங்களுக்குக் கூடுதல் தூக்கம் தேவைப்படுகிறது என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையின் முன்னுரிமையாகத் தூக்கத்தை மாற்றுங்கள். தூங்குவதற்கான நேரத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். அன்றாடம் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்துகொள்வது ஆரோக்கியமானது. உங்கள் படுக்கையறையை அமைதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதும் இதில் அடக்கம்.

நகர்ப்புற, கிராமப்புற நோய்த் தொற்று தொலைநோக்குப் பார்வை’ (PURE) என்ற தலைப்பில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள் சமீபத்தில் லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியிருக்கின்றன. ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 21 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நாடுகளில் வருமான அளவீடுகளைக் கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இதய நோய்களே இறப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வருமானம் கொண்ட நாடுகள் இதய நோய்களைக் கட்டுப்படுத்தியிருக்கின்றன. இந்தியா போன்ற குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இதய நோய்களால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க இன்னும் முறையான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது.

மன அழுத்தத்தைத் தவிர்த்தல்

மன அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காகச் சிலர் அதிகமாகச் சாப்பிடுவது, மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். இது இன்னும் தீவிரமான பாதிப்புகளையே ஏற்படுத்தும். அன்றாட மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி, தியானம் போன்றவைதான் சரியான தீர்வாக இருக்கும்.

மருத்துவப் பரிசோதனைகள்

உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு போன்றவை உங்கள் இதய, ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையை மருத்துவப் பரிசோதனை செய்யாமல் உங்களால் கண்டறிய முடியாது. அதனால், 40 வயதுக்கு மேலானவர்கள் ரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து அளவுகள், நீரிழிவு போன்ற மருத்துவச் சோதனைகளைக் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது செய்துகொள்வது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *