ஆண்ட்ராய்டு பயனர்களே இந்த 9 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்.!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் சேவைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பேஸ்புக் தகவல்களை திருடும் 9 ஆப் வசதிகளை நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

அதாவது பேஸ்புக் பயனர்களின் உள்நுழைவுகளையும், கடவுச்சொற்களையும் திருடும் 9 தீங்கிழைக்கும் ஆப் பயன்பாடுகளை Doctor Web’s malware ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பின்பு இந்த 9 ஆப் வசதிகளும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்துள்ளன. மேலும் இது தீங்கிழைக்கும் ஆப் வசதிகள் என்று அந்த ஆய்வாளர்கள் கூகுள் நிறுவனத்திடம் புகார் கொடுத்துள்ளனர்

அதன்பின்பு இந்த 9 ஆப் வசதிகளையும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. குறிப்பாக இந்த ஆப் வசதிகளை ஏற்கனவே அதிக மக்கள் டவுன்லோட் செய்துள்ளனர். மால்வேரால் பதிக்கப்பட்டுள்ள 9 ஆப்ஸ்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். இந்த பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு ஆப் பயன்பாடு உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் கூட உங்களுக்கு ஆபத்து தான். ஆகையால், பட்டியலில் உள்ள ஆப்ஸ்களை செக் செய்துவிட்டு, உங்கள் போனில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கம் செய்யுங்கள்

பிஐபி போட்டோ (PIP Photo) பிஐபி போட்டோ ஆனது புகைப்படங்களை எடிட்டிங் செய்யும் ஆப் வசதியாகும். இது Lillians என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆப் வசதியை இதுவரை 5,000,000 ஆண்ட்ராய்டு சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை உடனே டெலிட் செய்வது நல்லது.

Processing Photo ஆப் வசதி

Processing Photo ஆப் வசதியின் டெவலப்பர் chikumburahamilton ஆகும். இதுவும் தீங்கிழைக்கும் ஆப் வசதியாகும். ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த ஆப் வசதி 5,000,000-க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது

Rubbish Cleaner ஆப்

Rubbish Cleaner ஆனது ஆண்ட்ராய்டு சாதனத்தின் செயல்திறனை மேம்படுத்தக்கூடிய ஒரு ஆப் வசதியாகும். இதுவும் தீங்கிழைக்கும் ஆப் வசதியாகும். உடனே இதை டெலிட் செய்வது நல்லது. இதுவரை 1,000,000-க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது இந்த ஆப் வசதி.

Horoscope Daily ஆப்

Horoscope Daily ஆப் வசதியானது இதுவரை ஆண்ட்ராய்டு சாதனங்களில் 1,000,000 க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டெவலப்பர் HscopeDaily momo என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆப் வசதியை டெலிட் செய்வது மிகவும் நல்லது.

Inwell Fitness ஆப்

பெயர் குறிப்பிடுவது போல இது ஒரு உடற்பயிற்சி ஆப் பயன்பாடு ஆகும். Inwell Fitness ஆப் ஆனது ஆண்ட்ராய்டு சாதனங்களில் 5,000,000 க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதை உடனே டெலிட் செய்வது நல்லது.

ஆப் லாக் கீப் (App Lock Keep)

App Lock Keep ஆப் வசதியானது இதுவரை 5,000 க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் டெவலப்பர் ஷெராலா ரென்ஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு தீங்கிழைக்கும் ஆப் வசதியாகும்

Lockit Master ஆப்

Lockit Master ஆப் ஆனது ஆண்ட்ராய்டு சாதனங்களில் இதுவரை 5,000,000 க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் டெவலப்பர் Enali mchicolo என்று கூறப்படுகிறது. மேலும் இதை உடனே டெலிட் செய்வது நல்லது.

Horoscope Pi ஆப்

Horoscope Pi ஆப் ஆனது ஆண்ட்ராய்டு சாதனங்களில் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் டெவலப்பர் Talleyr Shauna என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப் லாக் மெனேஜர் (App Lock Manager)

App Lock Manager வசதியானது மிகவும் பிரபலமானது என்று கூறப்படுகிறது. இதன் டெவலப்பர் Implummet col என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே செய்வது மிகவும் நல்லது.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *