Visits of Current Page:705
GlobalTotal: 311185

உள்ளதை உரக்க சொல்லலாம் -அது
உயர்வுள்ளவன் செய்யும் செயல்
நல்லதை சிறக்கச் செய்யலாம்-அதுவும்
நாலு பேருக்கு நன்மை தரும் பணி
ஆண்டவன் தந்த அறிவினை கொண்டு
ஆற்றலை பெருக்கி சிந்தித்து பார்!
உழைப்பவன் அரைவயிற்று கஞ்சிக்கு
வழியில்லை என்று அறிந்தும்
உன் பெருமை காட்ட வம்புக்காய் வலிந்து
ஆடம்பரம் செய்வோரே
ஆழ்ந்து சிந்தியுங்கள்!
நீங்கள் வள்ளலாக வேண்டாம்
வாடும் உறவுகளுக்கு
அள்ளிக் கொடுக்க வேண்டாம்
கிள்ளியேனும் கொடுத்துப்பாருங்கள்
கிளம்பும் உன்மனதில்
மகிழ்சியான ஆனந்தம்
அதுவே மனித நேயமானது மகிழ்வானது!
ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா