Ladies Finger for Beautiful Face/வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் / அழகு குறிப்பு

ஓக்ரா என்ற பூக்கும் செடியை வெண்டைக்காய் என்ற முறையில் உலகத்தில் உள்ள பல மூலைகளிலும் தெரிந்திருக்கும். பூக்கும் செடியில் கிடைக்கும் காய் என்பதால் அதன் விலையும் அதிகம். இந்த சுவாரஸ்யமான செடியின் விஞ்ஞான பெயர் “அபெல்மோஸ்சஸ் எஸ்குலெண்டஸ்”.

கெட்ட கொழுப்பை நீக்கும் வெண்டைக்காய் - Tamil Nigar

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று கூறுவர் ஆனால் வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ சர்க்கரை , அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பதில் சந்தேகம் வேண்டாம்.வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன.


வெண்டிக்காயில் என்ன இருக்கிறது? (100 கிராமில்)


ஆற்றல் 35 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் 7.45 கிராம்
கொழுப்பு 0.19 கிராம்
புரதம் 2 கிராம்
வைட்டமின் ஏ 36 மியூஜி
வைட்டமின் சி 23 மி.கி.
வைட்டமின் இ 0.27 மி.கி.
வைட்டமின் கே 31.3 மியூஜி
கால்சியம் 82 மி.கி.
இரும்பு 0.62 மி.கி.

‘லேடிஸ் ஃபிங்கர்ஸ்’ ஆங்கிலத்தில் என அழைக்கப்படுகிறது வெண்டைக்காய். வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி, ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியது. இதில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்கி, ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைக் குறைக்கிறது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதும் தவிர்க்கப்படுகிறது. எடை குறைப்பு முயற்சியில் இருப்போருக்கு மிகவும் உகந்த ஒரு காய் இது. காரணம், இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் குறைந்த ஆற்றலும். 100 கிராம் வெண்டைக்காயில் இருப்பது வெறும் 35 கிலோ கலோரிகள் மட்டுமே.

vendakkai

அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘பார்ட்டிகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

vendakkai

வெண்டைக்காய் சாப்பிட்டால் பார்வைத் திறன் மேம்படும் என்கிற தகவல் பலருக்கும் தெரியாது. வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடியது. வெண்டைக்காய் ரத்த விருத்திக்கு உதவும் என்பதும் கொனோரியா எனப்படுகிற முழங்கால் வளைவுப் பிரச்னைக்கு உதவும் என்பதும் பலருக்கும் புதிய தகவல்களாக இருக்கும். வெண்டைக்காய்க்கு சரும அழகைக் கூட்டும் குணம் உள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடல் சுத்தமாகிறது. அதனால் சருமம் தெளிவாகிறது. பரு வருவது கூட தடுக்கப்படுகிறது. வெண்டைக்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரில் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கூந்தலை அலசினால் தலைமுடி பளபளப்பாகும்.’’

வெண்டிக்காயை வைத்து ஒரு அழகு குறிப்பு

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *