முதன்முதலாக திருவாசகத்திற்கென்று கல்வெட்டுக்களைக்கொண்ட அரண்மனை ஒன்று யாழ்ப்பாணம்- நாவற்குழியில் நிறுவப்பட்டுள்ளது.

Visits of Current Page:861
GlobalTotal: 235048

உலகிலேயே முதன்முதலாக திருவாசகத்திற்கென்று கல்வெட்டுக்களைக்கொண்ட அரண்மனை ஒன்று சிவபூமியாகிய இலங்கை- யாழ்ப்பாணம்- நாவற்குழியில் நிறுவப்பட்டுள்ளது.அத்துடன் இலங்கையிலேயே சிவ தட்சிணாமூர்த்திக்குரிய திருக்கோவில் ஒன்றும் இதனுடன் நிறுவப்பட்டு 24.6.2018 அன்று திறக்கப்பட்டுள்ளது. சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தினால் நிறுவப்பட்ட சிவபூமி திருவாசக அரண்மனை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவதட்சணாமூர்த்தி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.

தெவிட்டாத இன்பத்தமிழ்த் திருவாசகத் தேன் துளிகள் கருங்கல்லில் உருப்பெரும் அளப்பெரும் பணி. வாழும் தலைமுறைக்கும் வருகின்ற தலைமுறைக்கும் அமிழ்தினுமினிய தமிழின் வரலாற்று பெருமை சொல்ல நாவற்குழியில் திருவாசகத்திற்கு ஓர் அரண்மனை அமைக்கப்பட்டது.

Leave a Reply