சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 8

தொழிற்சங்கம் அமைக்கும் ஆர்வம் அவனிடம் துளிர் விட ஆரம்பித்தப் போது தன்னுடன் பழகும் ஆட்களிடம் அதை மெல்லப் பரப்பினாள். தன்னுடைய சக தொழிலாள தோழர்களின் துன்பம் கண்டு துடிக்காத ஒருவன், அவனது துயர்களைய முன் வராத ஒருவன் என்னதான் பிற முன்னேற்றங்களைக் கண்டாலும் பிரயோஜனமில்லை என்பது அவனது முடிவான தீர்மானமாக இருந்தது.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து நான்காம் ஆண்டு இந்தியாவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு, ஒருவட்சத்துக்கு மேல் மக்கள் ஒரே இரவில் பலியான போது முழு உலகமே அது கண்டு அதிர்ச்சிக்குள்ளானது.

அகில மெங்கும் அநீதி அதிகரித்து விட்டது. இது பொறுக்காது ஆண்டவன் செயல்படுவதை இது காட்டுகிறது என்று சமாதானம் கூறினான். இப்படி நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும், நல்லது கெட்டது பார்த்து, கருத்துக் கூறும் வேலாயுதன் இப்போது கொலை கேசில் மாட்டி யிருப்பதை நம்ப முடியவில்லை.

தொழிற்சங்கம் அமைக்கும் ஆர்வம் அவனிடம் துளிர் விட ஆரம்பித்தப் போது தன்னுடன் பழகும் ஆட்களிடம் அதை மெல்லப் பரப்பினாள். தன்னுடைய சக தொழிலாள தோழர்களின் துன்பம் கண்டு துடிக்காத ஒருவன், அவனது துயர்களைய முன் வராத ஒருவன் என்னதான் பிற முன்னேற்றங்களைக் கண்டாலும் பிரயோஜனமில்லை என்பது அவனது முடிவான தீர்மானமாக இருந்தது.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து நான்காம் ஆண்டு இந்தியாவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு, ஒருலட்சத்துக்கு மேல் மக்கள் ஒரே இரவில் பலியான போது முழு உலகமே அது கண்டு அதிர்ச்சிக்குள்ளானது.

அகில மெங்கும் அநீதி அதிகரித்து விட்டது. இது பொறுக்காது ஆண்டவன் செயல்படுவதை இது காட்டுகிறது என்று சமாதானம் கூறினான். இப்படி நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும், நல்லது கெட்டது பார்த்து, கருத்துக் கூறும் வேலாயுதன் இப்போது கொலை கேசில் மாட்டி யிருப்பதை நம்ப முடியவில்லை.

ஓர் ஆறு தோட்டத்தின் நடுவே ஊடறுத்து ஓடுகிறது. அதன் இரண்டு கரைகளும் ஓடுகிற ஆற்றுநீரை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றதே தவிர மற்றபடி அந்த இரண்டு கரைகளும் ஒன்றை ஒன்று சந்திப்பதே இல்லை.

தோட்டத்தில் லேபரர்ஸ், ஸ்டாவ்ஸ் என்ற இரண்டு பிரிவினர் வாழுகின்றனர், இவர்களும் அந்த ஆற்றின் கரைகளைப் போன்றவர்கள்.

ஒரே மொழியைப் பேசிவருமிவர்கள், இந்திய தேசத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களிடையே ஒற்றுமையில்லை, இந்த ஒற்றுமையில்லாக் குணத்தை ஸ்திரப்படுத்துவதற்கு பிரிட்டிஷார் பெரிய கிளாக்கர், பெரிய டீ மேக்கர் என்ற உயர் பதவிகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களையும், அதை விட குறைந்த மலை உத்தியோகப் பதவிகளில் இந்தியத் தமிழர்களையும் அமர்த்தினர். பெரிய கங்காணி எப்போதும் இந்தியர்தான்.

ஒரு தோட்டத்துக்குள்ளாக தமக்குள் ஒட்டி உறவாடாத பிரிவினர் இப்படிதான் உருவாகினர். அதை நீர் விட்டு வளர்த்தது வெள்ளைக் கார நிர்வாகமும், வெள்ளைக்கார அரசாங்கமும். ஜேம்ஸ் டெய்லரின் தோட்டத்தில் வேலை செய்வதற்கு வந்த முப்பது குடும்பத்தோடு ஆரம்பமான ஒரு சமூக அமைப்பு சிதிலம் சிதிலமாக சிதறடிக்கப்பட்டு, தோட்டம் தோட்டமாக பிய்த்துப் பிடுங்கப்பட்டது.

காலப்பறவையின் கோரப்பிடியில் சிக்கி ஆயிரத்து முன்னூறு தோட்டங்களில் ஏழுலட்ச மனித ஜீவன்களாக அது உயிர் வாழுகிறது.

அதனை இதய பூர்வமாக உணர்ந்து ஒத்துக்கொள்வதற்கு உயர்மட்ட நிர்வாகம் ஒத்துக் கொள்வதில்லை. முல்லோயா கோவிந்தன் தான் தொழில் புரிந்த தொழிற்சாலை முன்றலில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பானா?

இப்படியே போனால் இன்னும் இருபது வருடங்களில் இந்த சமூகம் இலங்கையில் இல்லாமற் போய்விடும்.

தோட்டங்களை வடிவமைத்தவர்கள் இங்கிலீஷ்காரர்கள்தான். ஸ்கொட்லாந்திலிந்தும் அயர்லாந்திலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் இலங்கைக்கு வந்த இவர்கள், இந்தியாவிலிருந்து நம்மைக் கொண்டு வந்து மலைப்பகுதிகளில் குடியேற்றி இந்த மலைகளில் எல்லாம் மரகதப்பசுமை விளையச் செய்தார்கள்.

போர்த்துக் கேயரும் ஒல்லாந்தரும் தம் பங்குக்கு இந்நாட்டில் தமது செல்வாக்கினை விட்டுச் சென்றுள்ளனர்.

இலங்கை கடற்கரை முழுக்க போர்த்துக்கேயச் செல்வாக்கு இலங்கை கடற்கரை யோரம் பறங்கிச் செல்வாக்கு, மலைநாட்டில் இங்கிலீஷ் செல்வாக்கு.

கண்டியை அண்டியது ஆங்கிலேயச் செல்வாக்கு மட்டுந்தான். அவர்கள்தான் கண்டியை ஊடறுத்த காடுகளை அழித்து. மலைகளைக் கடந்து பாதைகளமைத்தனர்.

சாத்தன் கங்காணிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.

ஸ்டோர் என்று தொழிலாளர்கள் கூறும் தொழிற்சாலையில் வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டனர். வேலாயுதத்தை சிபார்சு செய்து அனுப்பினார். கடின உழைப்புக்கு பேர் போனவன். எவ்வளவு சிரமமானதென்றாலும் செய்து முடிக்க அவன் பின் நின்றதில்லை. கடந்த ஐந்து வருஷங்களுக்கு மேல் மலை வேலைகளில் அவனது திறமையைக் கவனித்து வந்திருக்கிறார். கவ்வாத்துக் காட்டு வேலைக்கு தெரிவாகும் தொழிலாளர்கள் முதலாம் நம்பர் தொழிலாளர்கள் என்று கூறப்படுவதுண்டு. அதில் பேர் வாங்கியவன் வேலாயுதம்.

அதிலிருந்து அவனை ஸ்டோர் வேலைக்கு மாற்றினார். ஸ்டோர் வேலைக்கு அவனை மாற்றியதற்கு உரிய காரணம் அவருக்கு மாக்கிரமே தெரியும்.

முதல் ஆளாக கவ்வாத்து மலையிலிருந்து கணக்கை முடித்து விட்டு கீழிறங்குபவன் வேலாயுதந்தான்.

இருவாரங்களுக்குள் மேலும் ஐவர் அவனுடன் கணக்கு முடித்து கீழிறங்கினர்.

மலையில் தேயிலை மரங்களின் மட்டம் பார்த்து ஒரே திசையில் கூர் வைத்து வாதுகளின் வளர்ச்சிக்கேற்ப அதன் அடர்த்தியைக் களைந்து, நடுவாதுகளை கலைத்து கவ்வாத்துப் பண்ணவேண்டும், வளர்ந்து படர்ந்து அகன்று இருக்கும் தேயிலை மரமென்றாலும் நின்ற இடத்திலே இருந்து கவ்வாத்துப் பண்ணுவது ஒருகலை. அது பிடிபடும் வரையிலும் மரத்தைச் சுற்றி சுற்றி வந்தாலும் ஒருமரத்தை கவ்வாத்துப் பண்ணுவதற்குள் வேண்டாம் என்று ஆகிவிடும்.

பேருக்கு நூற்றி எண்பது மரங்கள் கவ்வாத்துப் பண்ணுவது பிரயத்தனமானச் செயல்.

வலக்கையில் கத்தியைப் பிடித்து லாவகமாக தேயிலை மரத்தை வெட்டி, இடக்கையில் வெட்டிய மிலாறுகளை ஒதுக்கிய வண்ணம் முன்னேறிச்செல்ல ஒருவன் ஒண்ணாம் நம்பர் தொழிலாளியாக இருக்கவேண்டும்.

வேலாயுதத்துடன் வேறு ஐந்து தொழிலாளர்களும் நேரத்துடன் வேலைமுடித்துவிட்டு மலையிலிருந்து வீடு செல்வதைக் கவனித்தார் சாத்தன் கங்காணியார்.

அவர்கள் ஆறு பேரும் கவ்வாத்துக் காட்டில் இறங்கிவிட்டால் வேறெதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. ஓரிருவார்த்தைகள் தங்களுக்குள் கதைத்துக் கொள்வதோடு சரி, கடைசி மரத்தை கவ்வாத்துப் பண்ணிய கையோடு, கவ்வாத்துக் கத்தியைத் தரையில் வைத்து கும்பிட்டு விட்டு, மலையிலிருந்து இறங்குவர், அவர்கள் இப்படிச் செல்வதை அவதானித்த சாத்தன், அவர்களைப் பிரித்து தொழிலுக்குப் போட்டார்.

அாம்பத்திலேயே இப்படி கூட்டுச் சேர்வதை, நாட்கள் செல்ல – செல +டு வளர்ந்து தம்முடைய கங்காணித்தனத்துக் கெதிராகத்

திரும்புவதை விரும்பாத சாத்தன் கங்காணி வேலாயுதத்தை ஸ்டோர் வேலைக்கு அனுப்பி வைத்தார்.

தோட்டத்து பெரிய டீ மேக்கர் காசிம், தன்னுடன் கதைக்கும் போது நல்ல ஆளாக நம்பிக்கைக் குரியவனாக ஒருவனைத் தொழிற்சாலை வேலைக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டபொழுது வேலாயுதம் தான் நினைவிற்கு வந்தான்.

சாத்தனின் உதவி காசிம்முக்கும், காசிம்மின் உதவி சாத்தனுக்கும் தேவைப்படுகிற நேரங்கள் பலவுண்டு, தோட்ட உத்தியோகஸ்தர்கள் தங்களுக்குள் இப்படி ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்குவதும் சமயம் வாய்க்கும் போது ஒருவரை ஒருவர் குழிபறிப்பதும் சர்வசாதாரணம். வேலாயுதத்தின் மூலம் தன்னுடைய செல்வாக்கெதிராக வளர முயற்சித்த காசிம் டீ மேக்கரை மட்டம் தட்ட முனைந்தார் சாத்தன் கங்காணி, ஈற்றில் அவருக்குதான் வெற்றி.

தேயிலைத் தொழிற்சாலையில் சல்லடைக் காம்பரா வேலை என்றாலே ஒரு தனி கௌரவம். சல்லடைக் காம்பராவில் பணியாற்றிய அத்தனைப் பெண்களும் அவனை சொந்தம் கொண்டாடினர்.

சில பெண்களுக்கு அண்ணனாகவும் சில பெண்களுக்கு மகனாகவும் அவன் மாறினான். அதுவரையிலும் பலரது பார்வைக்கும் பதில் கூற வேண்டிய நிலையிலிருந்த அத்தனைப் பெண்களும் அந்தப் பயத்திலிருந்து விடுதலைப் பெற்றனர்.

இருபத்தைந்து பெண்கள் ஒரே இடத்தில் தொழில் புரியும் போது, அவர்கள் மேனி முழுக்க சுனைத்தூசி படர்ந்து அவர்கள் செம்பட்டை நிறத்தில் காட்சிதருவது தனி அழகு, ஆங்கிலோ இந்தியப் பெண்களைப் பார்ப்பது போலிருக்கும். சல்லடைக்காம்பராவில் ஆண்கள் யாரும் வேலை செய்வதில்லை. அது முழுக்க பெண்களின் ராஜ்யம். அது வேலாயுதத்தின் கீழ்வந்தது.

அந்த தனிமையே அவனுக்கொரு கட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. கட்டுப்பாடான அவனது வாழ்க்கை காசிம்மின் ஓட்டத்தை நிறுத்தியது, பெண்கள் விடயத்திலும், தூள் களையாடும் விடயத்திலும், இந்த இரண்டு

விடயத்திலும் தன்னை வெல்ல வேறு யார் இருக்கிறார்கள் என்று எண்ணித் திரிந்த மேக்கருக்கு இப்போது நிலமை தர்ம சங்கடமானது. தருணத்துக்காகப் பொறுத்திருந்தார். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு, தருணத்தை தானே உண்டு பண்ணினார். தனது உருவில் பாவை செய்தான் என்று அவன்மீது குற்றம் சுமத்தி அவனை தொழிற்சாலை வேலையினின்றும் இடைநிறுத்தினார்.

அவன் அதைச் செய்திருக்க முடியாது என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

பாவை செய்வது சர்வ சாதாரணமாக தோட்டத்தில் நடக்கும் ஒரு செயல்,

கோதுமை மாவினால் பகையாளியின் உருவத்தைச் செய்து, அதில் ஆணி அடித்து, மந்திரம் ஜபித்து, தர்ப்பூசணிக்காயை வெட்டுவதன்மூலம், அந்த உருவத்தை ரத்தச் சிவப்பாக்கி, அதை நடுச்சந்தியில் வீசி எறிவர். அப்படி தன்னுடைய உருவம் ஸ்டோருக்கருகில் முச்சந்தியில் கான் ஒன்றில் கிடந்த போது அதைப் பார்த்து துடித்துப்போனார்.

அந்தப் பழியை வேலாயுதத்தின் மீது போட்டு அவனை வேலையினின்றும் நிறுத்தினார்.

தோட்டத்து மக்களிடையே காலங்காலமாக இருந்து வரும் இந்த அறிவுக்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களை போப்துரை மதிப்பதில்லை.

ஆனால் புதிதாக தோட்ட மக்களிடையே பரவிவரும் தொழிற் சங்கத்துக்கு ஆள்சேர்க்கும் பணியில் ஈடுபடும் வேலாயுதத்தை பழி தீர்க்க பார்ந்திருந்த அவருக்கு இதை விட இன்னொரு சந்தர்ப்பம் கிட்டுமா? சரி என்று ஒத்துக்கொண்டு அவனை வேலையினின்றும் தூக்கினார்.

தன்மீது இப்படி ஒரு பழியா? வேலாயுதம் பொங்கி வழிந்தான், வீராசாமிதான் அவனைச் சமாதானப் படுத்தினான். “நாம் செய்ய வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அதுவரை பொறுத்துதான் ஆகவேண்டும்” என்ற அவனது அறிவுரை வேலாயுதத்தை அடக்கி வைத்தது.

தன்னுடைய உணர்ச்சியை இப்படி எத்தனைத் தரம் அடக்கி வைக்க – வேண்டியிருந்தது?

தொடரும்…

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *