அமரர் க.நல்லையா இன்று(26.04.2022)இயற்கை எய்தினார்

பிரபல கணித ஆசிரியர் க.நல்லையா காலமானார். கடந்த நான்கு தசாப்த காலமாக வடமராட்சி பிரதேசத்திலே கல்வி பொது தராதர உயர்தர வகுப்புக்களுக்கு கணிதம் கற்பித்து பல பொறியியலாளர்களையும் கணித பட்டதாரிகளையும் உருவாக்கிய கொம்மந்தறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணித பேராசான் கந்தையா நல்லையா இன்று 26.04.2022 காலமானார். இவர் வடமராட்சியின் பிரபல கல்வி நிறுவனங்களான வன்னிச்சியம்மன் கோவிலடி அமெச்சூர் அக்கடமி, நெல்லியடி அமெச்சூர் அக்கடமி,சயன்ஷ் சென்ரர், பீக்கொன் போன்ற கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் ஆவார்.அன்னாரின் ஈமக்கிரிகை நாளை(27.04.2022)மதியம் 2:00மணியளவில் நடைபெற்று பின் மயிலியதனை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

மற்றய விபரங்கள் விரைவில் அறிய தரப்படும்

Visits of Current Page:495
GlobalTotal: 135526

Leave a Reply