மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 16 – T .சௌந்தர்

முதுமை தட்டாத இசையும் புதிய பாடகர்களும் :  

எம்.ஜி .ஆர் ,சிவாஜி ,ஜெமினி கணேசன் போன்றோர்கள் முன்னணியில் திகழ்ந்த வேளையில் புதியவர்களான முத்துராமன் ,ஜெய்சங்கர் ,ரவிசந்திரன், ஏ.வி.எம்.ராஜன் , போன்ற நடிகர்கள் அறிமுகமானாலும் ,அவர்களும் அறிமுகமாகி ஒரு தசாப்தம் முடிந்த நிலையிலும் ,முன்னையவர்களே   முன்னணியிலிருந்த வேளையில் ஏலவே சொல்லப்படட கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு ஒரு விதமான சலிப்பு தன்மை கதைகளில் இருந்தது. பழைய நடிகர்களின் வகைமாதிரியான நடிப்பும் ,கதைகளின் தொய்விற்கும்  இசையால் மட்டும் எப்படி புதுமை சேர்க்க முடியும். பாடல்களில் ,இசையில் தொய்வு என்று 1970 களின் பாடல்களை பற்றி பேச்சு மெதுவாகக் ஒலிக்கத்தொடங்கியது.இது குறித்து மெல்லிசைமன்னர் டி.கே.ராமமூர்த்தி ” புதியவர்களை சினிமா உலகம் புகவிடாமல் இருப்பது தான் காரணம் ” என  கருத்து கூறியது கவனத்திற்குரியது.

மெல்லிசைமன்னர் டி.கே.ராமமூர்த்தி கூறிய கருத்து புது இசையமைப்பாளர்கள் உருவாக்கவில்லை என்பதாகவே நாம் நினைக்க வழி வகுக்கிறது. இதை நிரூபிப்பது போல ஹிந்தி சினிமாவில் பல புதிய இசையமைப்பாளர்கள் உருவாக்கி வந்த காலமும் அதுவாக இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.ஆனாலும் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் இசையில் வெளிவந்த அக்காலப் பாடல்களை நோக்கும் போது அவரது படைப்பாற்றல் அந்த மந்த நிலையைக் கடக்க முயன்றதாகவே தெரிகிறது.

எஸ்.ராஜேஸ்வரராவ்

மிஸ்ஸியம்மா ,பிரேமபாசம்,மனம் போல மாங்கல்யம்  போன்ற புகழபெற்ற படங்களுக்கு இசையமைத்த   பழம்பெரும் இசையமைப்பாளரான எஸ்.ராஜேஸ்வரராவ் ஒரு படத்தின் இசையமைப்பில் போது படத்தின் இயக்குனர்  “புதுமையான இசை வேண்டும் ” என்று கோரிக்கை வைக்க ” என்னய்யா இது ,இருபது வருடத்திற்கு முன் இருந்த அதே கதாநாயகன் ,அதே மாதிரியான பழைய கதை , அதற்கு  ஏன் புதிய இசை ; பழைய இசையே இதற்கு போதும் ” என்று கூறினாராம்.

குறிப்பாக  1970 முதல் 1973 வரை வெளிவந்த வழமையாகப்  பாடிவந்த பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்  மற்றும் அவ்வப்போது பாடிவந்த எஸ்.ஜானகி போன்ற பாடகர்களுடன் பி.வசந்தா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற புதிய பாடகரையும் பாட வைத்தார்.இக்காலங்களில் வெளிவந்த பாடல்களில் மெல்லிசையின் வசீகரங்களை இயல்பாக இழையோடும்  இனிமையுடன் இணைந்திருப்பதைக் காண முடியும்.  அங்கே மெல்லிசையின் வலிமையையும் ,ஆறாகப் பெருக்கெடுக்கும் படைப்பாற்றலையும் காண்கிறோம்.அலுக்காமல் ,சலிக்காமல் தனி ஒருவராக அவர் நிகழ்த்திய இசையமைப்பு இன்று கேட்டும் போதும் நம்மை பெரு வியப்புக்குள்ளாக்குகிறது.பாடல்களில் தான் எத்தனை எத்தனை இனிய இசைவுகள்!

பகட்டும் ,போலித்தனமும் மிகுந்த ,ஒரே வகைமாதிரியான போலிக் புனைவுகளாக அமைக்கப்பட்ட ,செயற்கைத்தனமான கதைகளுக்குக்கூட  ஆன்மா தழுவும் பாடலைத் தந்து தனது  அடிமன பேரரசையை இசையாக அள்ளி வீசியிருக்கின்றார். அற்ப காட்சிகளுக்கு ஜீவன்  ததும்புகிற,உள்ளக்  கிளர்ச்சிகளை உண்டாக்குகிற , வாத்தியஇசையின் தனித்துவம் மிக்க மீட்டல்களை அபரிமிதமாகத் தந்து கேட்கும் போதெல்லாம் நினைவுகளைக் கிளறிவிடும் பாடல்களுக்கு நம்மை அடிமைப்படுத்தி சென்றிருக்கின்றார்.   

குறிப்பாக பி.சுசீலாவை வைத்து அவர் நிகழ்த்திக்காட்டிய மெட்டுக்கள் கட்டறுத்து சென்ற இசை வெள்ளம் போன்றதாகும்.எத்தனை ,எத்தனை பாவங்கள்..எத்தனை விதமான பாடல்கள்!!

01  காதல் காதல் என்று பேச –  உத்தரவின்றி உள்ளே வா 1971 – பி.சுசீலா + எம்.எல்.ஸ்ரீகாந்த்  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

02  ஒரு நாள் இரவு பகல் போல நிலவு     –  காவியத் தலைவி  1970 –  பி. சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

03 வசந்தத்தில் ஓர் நாள்  –  மூன்று தெய்வங்கள்     1971 -பி.சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

04  மலர் எது என் கண்கள்  தானென்று    –  அவளுக்கென்றோர் மனம்  1971 -பி.சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

05  இறைவன் வருவான்    –  சாந்தி நிலையம்  1971 -பி.சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

06  செல்வங்களே தெய்வங்கள் வாழும்   –  சாந்தி நிலையம்  1971 -பி.சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

07  கடவுள் ஒருநாள் உலகைக்காக்க  –  சாந்தி நிலையம்  1971 -பி.சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

08  ஓராயிரம் நாடகம் ஆடினாள்  –  சுமதி என் சுந்தரி  1971 -பி.சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

09 ஒரு நாள் இரவு பகல் போல நிலவு     –  காவியத் தலைவி  1970 –  பி. சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

10  சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் – ராமன் எத்தனை ராமனடி 1970 – பி.சுசீலா  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

11  கையோடு காய் சேர்க்கும் காலங்களே     –   காவியத்தலைவி   1971 – எஸ் .பி.பி    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

12  நிலவே நீ சாட்சி    – நிலவே நீ சாட்சி  1970 – பி.சுசீலா  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

13  உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்  –  அவளுக்கென்றோர் மனம்  1971 – எஸ்.ஜானகி   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

14  கண்ணன் எந்தன் காதலன்    –  ஒரு தாய் மக்கள்   1971 – பி.சுசீலா  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

15  ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்     –  ஒரு தாய் மக்கள்   1971 – டி.எம்.எஸ் +பி.சுசீலா  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

16  மஞ்சளும் தந்தாள்   –  தேனும் பாலும்    1971 – ஜிக்கி + எஸ்.ஜானகி   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

17  தன்னந்தனிமையிலே உடல் –  ஸ்கூல் மாஸ்டர்   1971 -பி.சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

18  மௌனம் தான் பேசியது  –  எதிர்காலம்   1973 -எல்.ஆர்.ஈஸ்வரி   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

19 கண்ணே பாப்பா   –  கண்ணே பாப்பா  1969 – பி.சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

20  தென்றலில் ஆடை பின்ன   –  கண்ணே பாப்பா  1969 – பி.சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

21 மன மேடை மலர்களுடன் தீபம் – ஞானஒளி 1972 – பி.சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

இப்படி எத்தனை வகை,வகையான இசைப்பாடல்களை மெல்லிசைமன்னர் தந்தார் என்பது நம்மை வியக்கவைக்கிறது. பாடலுக்குப் பாடல் புதிய ,புதிய தங்குதடையற்ற இசையோட்டங்ககளும் அதில் உண்டாகும்  மன எழுச்சியும் நம்மை தட்டி எழுப்பிச் செல்கின்றன. கணத்திற்கு கணம் மாறிச் செல்லும் எத்தனை விதம்விதமான அருமையான ஒலியலைகள்! 

மேலே குறிப்பிட்ட பி.சுசீலா பாடிய அத்தனை பாடல்களிலும் தெளிந்த நீரோட்டம் இருக்கும்.அது தான் மெல்லிசைமன்னர்களின் இசையின் தனி சிறப்பாகும். 

தமிழ் சினிமாவின் வர்த்தக சூத்திரத்தின் “ஹிட் ” என்ற சொற்பதத்திற்கும் ,அதற்கப்பாலும் பாடல் கலைவடிவம் என்பதற்கேற்ப முன்னணிப்பாடகரான டி.எம்.சௌந்தரராஜன் ,சுசீலா பாடிய பல பாடல்கள் இன்றும் நாம் கேட்கும் வகையில்  உள்ளன. தங்கள் பாடல்கள் நிலைத்து நிற்க  வேண்டும் என்று  எண்ணும்  இசையமைப்பாளர்கள் நல்ல பாடல்களை தயங்காது இசையமைத்தால் அவை அக்காலங்களையும் கடந்து ரசிக்கப்படும் என்பதற்கு மெல்லிசைமன்னரின் பாடல்கள்  சிறந்த எடுத்துக்காட்டாகும்.

“ஹிட் ” என்று கருதப்படுகிற  தற்காலிக வெற்றிப்பாடல்கள், குறிப்பாக தாளத்தை முன்னிறுத்தி போடப்படும்  பல பாடல்கள் காலவெள்ளத்தில் மறைந்து விடுகின்றன. ஆனாலும்   மெலோடியில் அமைக்கப்பட்ட பாடல்கள் அக்காலத்தில் சில வேளைகளில் வெற்றி பெற முடியாவிட்டாலும் காலம் தாழ்ந்தும் பிற்காலங்களில் ரசிக்கப்படுகின்றன.அதிகமாகப் புகழபெற்ற பாடல்கள் மட்டுமல்ல ,அதிகமாக் கேட்கப்படாத சில பாடல்களும் இனிமையில் முன்நிற்பதை நாம் மெல்லிசைமன்னரின் பாடல்களில் கேட்கலாம். பெரும்பாலும் மெல்லிசைமன்னரின் பாடல்கள் இனிமையில் அக்கால கட்டங்களில்  முன்னணியிலேயே இருந்திருக்கின்றன.

01  ஒரு ராஜா  ராணியிடம் -சிவந்த மண்1971 – டி.எம்.எஸ் + பி.சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

02  ஒரு நாளிலே உருவானதே  – சிவந்த மண் 1971 – டி.எம்.எஸ் + பி.சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

03  செல்லக்கிளிகளாம் பள்ளியிலே – எங்கமாமா  1970 – டி.எம்.எஸ் – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

04  ஒரே பாடல் உன்னை அழைக்கும் – எங்கிருந்தோ வந்தான்  1970 – டி.எம்.எஸ்  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

05  அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு – ராமன் எத்தனை ராமனடி 1970 – டி.எம்.எஸ் – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

06  தங்கப்பதக்கத்தின் மேலே –  எங்கள் தங்கம்    1970 – டி.எம்.எஸ் +பி.சுசீலா  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

07  இதோ எந்தன் தெய்வம் முன்னாலே –  பாபு 1971 – டி.எம்.எஸ்   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

08  நிலாவைப்பார்த்து வானம் சொன்னது – சவாலே சமாளி  1971 – டி.எம்.எஸ்   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

09  எங்கே அவள் என்றே மனம் – குமரிக்கோட்டம்  1971 – டி.எம்.எஸ்   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

10  நாம் ஒருவரை ஒருவர் – குமரிக்கோட்டம்  1971 – டி.எம்.எஸ் + எல்.ஆர்.ஈஸ்வரி    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

11  கன்னி ஒருத்தி மடியில்  – நீரும் நெருப்பும் 1971 – டி.எம்.எஸ் + சுசீலா    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

12  எதையும் தாங்குவேன் – தங்கைக்காக  1971 – டி.எம்.எஸ்  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

13  அழகிய தமிழ் மகள் இவள் –  ரிக்சாகாரன்   1971 – டி.எம்.எஸ் + சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

14  கடலோரம் வாங்கிய காற்று – ரிக்சாகாரன்   1971 – டி.எம்.எஸ்   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

15  ஆணையிட்டேன் நெருங்காதே – புன்னகை  1971 – எஸ்.ஜானகி – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

16  சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து – பிராப்தம் 1971 – டி.எம்.எஸ் + பி.சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

17  சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் – பிராப்தம் 1971 – டி.எம்.எஸ் + பி.சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

18  இசை கேட்டால் புவி அசைந்தாடும் – தவப்புதல்வன்  1972- டி.எம்.எஸ்  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

19  சிலர் குடிப்பது போல -சங்கே முழங்கு 1972 -டி.எம்.எஸ்.+ எல்.ஆர்.ஈஸ்வரி    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

20 என்னடி ராக்கம்மா பல்லாக்கு  –  பட்டிக்காடா பட்டணமா1972 – டி.எம்.எஸ்  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

21  மூன்று தமிழ் தோன்றியதும் -பிள்ளையோ பிள்ளை 1972 – டி.எம்.எஸ் +பி.சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

22  தேவனே என்னை பாருங்கள் – ஞானஒளி 1972 – டி.எம்.எஸ்  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

23  அம்மாக்கண்ணு சும்மா சொல்லு -ஞானஒளி 1972 – டி.எம்.எஸ்  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

24  அழகிய தமிழ் மகள் இவள் – ரிக்சாகாரன் 1972 – டி.எம்.எஸ் + சுசீலா   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

இவ்விதம் பல பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

******

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனால் முன்னணிக்குக் கொண்டுவரப்பட்ட முக்கியமான இளம் பாடகர்களில் ஒருவர்  எஸ்.பி. பாலசுப்ரமணியம்.  ஏற்கனவே தெலுங்கு ,கன்னடம் போன்ற மொழிகளில்  சில பாடல்களை பாடிய அவரை தமிழில் அதிகமாகப் பாட வைத்தவர்களில் விஸ்வநாதன் , கே.வி.மஹாதேவன் ,வி.குமார் போன்றோர் முக்கியமானவர்கள்.

குறிப்பாக மெல்லிசைமன்னரே அவரின் பாடும் ஆற்றல் தெரிந்து அதற்கேற்ப மெட்டுக்களை அமைத்துக் கொடுத்து அவரை முன்னணிக்கு கொண்டுவந்தார்.

காலையில் எழுந்ததும் எஸ்.பி.பி.யின் பக்திப்பாடல்கள்; 50 ஆண்டுகளாக வாழ்வில்  இரண்டறக் கலந்துவிட்ட குரல்!'' - நடிகை கே.ஆர்.விஜயா உருக்கம் | S.P. ...
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்  மிக இளம் வயதில் பாடகராக அறிமுகமானவர்.அவரது முதல் பாடல் , 1967 ம் ஆண்டு வெளிவந்த “மரியாத ராமண்ணா” என்ற தெலுங்குப் படத்தில் , இசையமைப்பாளர் கோதண்டபாணி என்பவருடைய இசையில் “ஏமி ஈ விந்த மோகம் ” என்று தொடங்கும் பாட ல் பி.சுசீலாவுடன் இணைந்து பாடி வெளிவந்தது. அதைத் தொடர்ந்து கன்னட சினிமாவில் அவரது உறவினரான எம்.ரங்காராவ் என்ற இசையமைப்பாளர் மூலம் அறிமுகமானார்.அவருடைய பாடல் முறை ஆந்திராவின் புகழ்பெற்ற பாடகரான கண்டசாலாவின் நகலாகும். ஆரம்பத்தில் அவர் போல பாடினாலும் பின்னாளில் அதிகம் பாடி தனது தனித்துவத்தைக் காண்பித்தார்.தனது அபிமான பாடகர்களாக முகமது ரபி ,ஜேசுதாஸ் போன்றோரை குறிப்பிடுகின்றார்.

மெல்லிசைமன்னர் இசையில் சாந்தி நிலையம் படத்தில் “இயற்கை என்னும் இளைய கன்னி ” என்ற பாடலை பி.சுசீலாவுடன் பாடி தமிழில் புகழ் பெற்றார்.அதைத் தொடர்ந்து தமிழில்  எம்.ஜி.ஆர். அவரது அடிமைப்பெண் படத்தில் ” ஆயிரம் நிலவே வா ” என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார்.எடுத்த எடுப்பிலேயே புகழபெற்ற நடிகர்களுக்கு பாடும் அதிர்ஷ்டம் பெற்றார்.இனிமையான குரல் வளம் கொண்டவராகவும் ,இசையமைப்பாளர்கள் சொல்லிக் கொடுக்கும் மெட்டை விரைவில் கிரகித்துப்பாடும் ஆற்றல் பெற்றவராகவும் விளங்குபவர்.

இவரது குரல் வளம் மத்யதாயியில் பாடுவதற்கு மிகவும் இயல்பாகவும் ,சில சமயங்களில் உச்சஸ்த்தாயியிலியும் சோபிக்கக்கூடிய தன்மை கொண்டது. குரலில் ஆழமில்லை .அதனால் கீழ் சுருதியில் இவரது குரல் அவ்வளவாக சோபிக்காது. கேள்வி ஞானத்தில் பாடுபவர். இவர் முறையாக இசை பயின்றவர் அல்ல. சினிமாவில் பாட முறையான பயிற்சி அவசியமில்லை என்பதும் இசையமைப்பாளர் சொல்வதை கிரகித்து பாடினால் போதும் என்பதும் உண்மையே. திறமை என்பதற்கப்பால் இவரது சமுதாய பின்னணியும் இவருக்கு இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க காரணம் என்று சொல்லலாம்.

அன்றைய நாளில் இரண்டாம் நிலையிலிருந்த கதாநாயகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். பாடும் வாய்ப்புகள் குறைந்து போன பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் இழந்த வாய்ப்புகள் பெரும்பாலும் பாலசுப்ரமணியத்தால் நிரப்பப்பட்டன. இரண்டாம் நிலைகளிலிருந்த கதாநாயகர்களின் குரலாக எஸ்.பி.பி. மாறினார்.

“ஒரு கால கட்டத்தில் மார்க்கெட் இழந்து ஸ்டுயோக்களில் சும்மா சுற்றிக்கொண்டிருந்தார் என்பது சினிமாவின் அபத்த சூழல்” என்று பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்   பற்றி எழுத்தாளர் R .P .ராஜநாயஹம்  குறிப்பிடுவார்.

தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் அதிகமான பாடல்களை பாடிய இவர் ஹிந்தியிலும் கே.பாலசந்தர் இயக்கிய ஏக் துஜே கேலியே [1982] படத்தில் பாடல்களை பாடி புகழ் பெற்றதுடன் அடந்தப்படத்தில் இவர் பாடிய “தேரே மேரே பீச்சுமே” என்ற பாடலுக்கான தேசிய விருதையும் பெற்றார். ஹிந்தி இசையமைப்பாளர்கள் லஷ்மிகாந்த் பியாரிலால் இவரது ஹிந்தி உச்சரிப்பில் அதிருப்தி கொண்ட போதிலும் ,படத்தின் இயக்குனரான பாலசந்தரின் பிடிவாதத்தால் பாட வைக்கப்பட்டார். பின் அப்படப்பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து ஹிந்தியிலும் அதிகம் பாடினார்.

மெல்லிசைப்பாடல்களைப் பாடுவதில் தனித்தன்மை காட்டும் இவர் எல்லாவிதமான பாடல்களையும் பாடும் ஆற்றல் கொண்டவர். தனது பாடும் முறை குறித்து அவ்வப்போது   சுயவிமர்சனமும் செய்து கொள்பவர்.. மெல்லிசை மன்னரிடம் முதல் பாடலை பாடிய இவர் ,அவரது இசையமைப்பில் மிக ஆரம்பத்திலேயே பல இனிய பாடல்களை  பாடும் வாய்ப்பையும் பெற்றார்.

மகிழ்சிப் பாடல்களை பாடுவதற்கேற்ற இவரது குரலில் பெண்மை நிறைந்திருந்தாலும் மென்மையான காதல் பாடல்களில் சோபிக்கும் பல பாடல்களை மெல்லிசைமன்னர் இவருக்கென்றே மெட்டமைத்தது போல சீரான  ஓட்டத்திலும் ,விறுவிறுப்பிலும் அமைத்து கொடுத்து பாட வைத்திருப்பார். அதை அவரும் நன்றாகவே பாடியுமுள்ளார்  .

விஸ்வநாதன் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சில ஆரம்பக்கால டூயட் பாடல்கள்.

01  இயற்கை என்னும் இளையகன்னி – சாந்தி நிலையம் 1969 – எஸ்.பி.பி + பி.சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

02  பௌர்ணமி நிலவில் கடற்கரை மணலில்  – கன்னிப்பெண்  1969- எஸ் .பி.பி + எஸ்.ஜானகி   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

03  மாதமோ ஆவணி -உத்தரவின்றி உள்ளே வா 1971- எஸ்.பி.பி + பி.சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

04  மங்கையரில் மகாராணி – அவளுக்கென்றோர் மனம் 1971 – எஸ்.பி.பி + பி.சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

05  உன்னைத் தொடுவது புதியது -உத்தரவின்றி உள்ளே வா 1971 – எஸ்.பி.பி + பி.சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

06  முள்ளில்லா ரோஜா  –  மூன்று தெய்வங்கள் 1971 – எஸ்.பி.பி + பி.சுசீலா – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

07  ஆரம்பம் இன்றே ஆகட்டும்  – காவியத்தலைவி 1971 – எஸ்.பி.பி.+ எல்.ஆர்.ஈஸ்வரி   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

08  என்ன சொல்ல என்ன சொல்ல  – பாபு    1971 – எஸ்.பி.பி.+ எல்.ஆர்.ஈஸ்வரி   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

09  கொட்டிக் கிடந்தது கனியிரண்டு – வாழ்ந்து  காட்டுகிறேன் 1975 – எஸ்.பி.பி.    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

10  கல்யாண ராமனுக்கும்  – நவாப் நாற்காலி1971 – எஸ் .பி.பி + பி.சுசீலா    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 

10  யமுனா நதி எங்கே  – கவுரவம் 1972 – எஸ் .பி.பி + பி.சுசீலா    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

11  நான்  என்றால் அது அவளும் நானும்  – சூரிய காந்தி 1973 – எஸ் .பி.பி + ஜெயலலிதா     – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்   

12  ஓடம் கடல் ஓடும் அது சொல்லும் கதையென்ன – கண்மணி ராஜா 1974- எஸ் .பி.பி + பி.சுசீலா  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்  

13  காதல் விளையாட காட்டில் இது கண்ணே – கண்மணி ராஜா 1974- எஸ் .பி.பி + பி.சுசீலா  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்    

14  கேட்டதெல்லாம் நான் தருவேன் – திக்குத் தெரியாத காட்டில்   1971 – எஸ் .பி.பி + பி.சுசீலா    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்  

15  ஆரம்பம் யாரிடம் உன்னிடம் தான் – மிஸ்டர் சம்பத் 1971 – எஸ் .பி.பி + பி.சுசீலா    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

16  கல்யாண ராமனுக்கும்  – நவாப் நாற்காலி 1971 – எஸ் .பி.பி + பி.சுசீலா    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 

17  யமுனா நதி எங்கே  – கவுரவம் 1972 – எஸ் .பி.பி + பி.சுசீலா  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

18  நான்  என்றால் அது அவளும் நானும் – சூரிய காந்தி  1973 – எஸ் .பி.பி + ஜெயலலிதா     – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்   

19  ஓடம் கடல் ஓடும் அது சொல்லும் கதையென்ன – கண்மணி ராஜா 1974- எஸ் .பி.பி + பி.சுசீலா  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்  

20  காதல் விளையாட காட்டில் இது கண்ணே   – கண்மணி ராஜா 1974- எஸ் .பி.பி + பி.சுசீலா  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய புகழ்பெற்ற சில தனிப்பாடல்கள்:

01  பொட்டு வைத்த முகமோ  – சுமதி என் சுந்தரி  1971 – எஸ் .பி.பி – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

02  அவள் ஒரு நவரச நாடகம்  – உலகம் சுற்றும் வாலிபன்  1973 – எஸ்.பி.பி.    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

03  தென்றலுக்கு என்றும் வயசு – பயணம் 1976 – எஸ்.பி.பி.    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

04  அன்பு வந்தது என்னை ஆழ வந்தது – சுடரும்  சூறாவளியும் 1971 – எஸ்.பி.பி.    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

05  ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு – அவளுக்கென்று ஓர்  மனம் 1973 – எஸ்.பி.பி.    – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

06  பொன் என்றும் பூ என்றும்  – நிலவே ஈ சாட்சி  1973 – எஸ்.பி.பி. – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

07  அவள் ஒரு நவரச நாடகம் – உலகம் சுற்றும் வாலிபன் 1973 – எஸ்.பி.பி. – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

08  வெற்றி மீது வெற்றி வந்து – தேடி வந்த மாப்பிள்ளை 1973 – எஸ்.பி.பி. – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

09  கடவுள் அமைத்து வைத்த மேடை – அவள் ஒரு தொடர்கதை 1974 – எஸ்.பி.பி. – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். 

இவ்விதம் பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

1971 தொடக்கம் 1980 கள் வரை படத்திற்கு படம் குறைந்தது ஒரு பாடலாவது பாடும் வாய்ப்பை விஸ்வநாதன் எஸ்.பி.பி க்கு கொடுத்தார். எஸ்.பி.பி யின்  குரலுக்கேற்ற பாடல்களை அமைத்ததுடன், பழமை படிந்த இசையிலிருந்து மீள்வதற்கான ஒரு வழிமுறையாக புதியவர்களுடன் இனிய மெட்டுக்களையும் இணைத்துக் கொடுக்க முனைந்தார்.

இக்காலத்தில் மெல்லிசைமன்னர் செவ்வியிசையில் நன்கு பரீட்சயமிக்க நல்ல பாடகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.அவர்களில் மூவர் மிக முக்கியமானவர்கள்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *