வே. கந்தசாமி

திரு: வே. கந்தசாமி
(சிறுவர் நன்னடத்தை அதிகாரி)

பிள்ளைக்கலட்டி உடுப்பிட்டி வடக்கு வல்வெட்டித்துறையை பிறப்பிட மாகவும் கொழும்பை வதிவிடமாககொண்ட

திரு கந்தசாமி 23-02-2023 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலம்சென்ற வேலுப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலம்சென்ற அரியபுத்திரர் இலட்சுமிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலாவின் அன்புக்கணவரும்,
பிரசன்னா, பிரதீபன்,பிரதா ஆகியோரின் அன்புத் தந்தையும்

காலம்சென்ற இராசம்மாவின் அன்புத்தம்பியும்

காலம்சென்ற சுப்பிரமணியம், சண்முகரட்ணதினம் (மந்திகை மருந்தகம்),
சிவதேவி, பாலகிருஷ்ணன் ஆகியோரின் மைத்துனரும், தேவிகா,ரமித்தா, ராசகுமார்,
நிர்மலா, ஸ்ரீரஞ்சனி, மோகன், பிரபாகரன், ராஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரியா, ரீனா ஆகியோரின் பேரனும்ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பிள்ளைக்கலட்டி இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்று ஊரிக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
0775212692
0778413568
பிள்ளைக்கலட்டி,
உடுப்பிட்டி வடக்கு
வல்வெட்டித்துறை.

அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

இது எமது உடுப்பிட்டி வடக்கை சேர்ந்த கம்பர்மலை, கொம்மந்தறை, மயிலியதனை, ஊரிக்காடு, கெருடாவில் ஊர்களில் வாழும் உறவினர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டு லண்டனிலிருந்து இயங்கும் இணையத்தளம். . ஊர்மக்கள் உங்கள் பிறந்தநாள் , திருமணநாள் மற்றும் பிற தகவல்களை எம்மிடம் தருவதன் மூலம் அவை கட்டணமின்றி எமது தளத்தில் பதிவிடப்பட்டு உலகளவில் எம் உறவினர்களுக்காக காட்சிபடுத்தபடும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம்………தொடர்புகளுக்கு மின்னஞ்சல் oorum.uravum@gmail.com

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *