நட்பு!

Visits of Current Page:514
GlobalTotal: 235018

நேரிய நோக்கு
நேர்மைப் பேச்சு
ஓங்கிய சிந்தனை
உள்ளதே நல்ல நடப்புக்கு அழகு!

தன்தேவை கருதி
தார்மீகப் பொறுப்பின்றி
சுயநலம் கொண்டால்
அதன் பெயர் நட்பாகாது!

புரிதலும் தெரிதலும்
புறம்பேசா செய்களும்
கரிசனை கொண்டு
கண்டறிந்த வாழ்வே
நட்புக்கு ‌அழகாகும்!

உள்ளொன்றும் புறம் ஒன்றும்
உண்மை நட்புக்கு அழகல்ல
சொல்லொன்றும் செயல் ஒன்றும்
சுகம் தரா நட்பாகும்!

நட்பு என்பது இருகாதலர்கள் போல்
இணைந்த இதயங்களாக
இன்பமாய் பயணிக்கும் பாதை
இறுதி வரை தொடர-அந்த நட்பே
வரலாற்றில் பதிவாகும் நட்பாகும்!

இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

Leave a Reply