சுவாமிநாதன் கனகராசா

யாழ் மானிப்பாயை பிறப்பிடமாகவும், கம்பர்மலையையும் தற்போது நெல்லியடியையும் வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் கனகராசா அவர்கள் இன்று (27.12.2022) செவ்வாய் கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் பகவதி தம்பதிகளின் மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பார்வதி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி (ஓய்வு பெற்ற தாதி) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மசீலன் (பாபு), காலஞ்சென்ற இராமச்சந்திரன் (பபா), மற்றும் சந்திராவதி, காலஞ்சென்ற தர்மராசா (ஆச்சா), மற்றும் தர்மதுரை (பௌசி), காலஞ்சென்ற தர்மரட்ணம் (ரஞ்சன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயரூபன், காலஞ்சென்ற ஜெயந்தன் (கண்ணன்), மற்றும் கஜந்தன், மயூரன் (கோபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மலோஜினி, கவிதா, தரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தனா, கஜானன், கஜனி, பிரகலாதன், பிருந்தாபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (28.12.2022) புதன்கிழமை தாரிக்கப்பற்று நெல்லியடி கிழக்கு கரவெட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் முற்பகல் 10.30 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வதிரி ஆலங்கட்டை  இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 கஜந்தன்

 0772627559 (Srilanka)

அமரர் சுவாமிநாதன் கனகரைாஜா அவர்களின் இறுதி நிகழ்வு நேரலை 28.12.2022

அவர்களின் பிரிவுச் செய்தியினைக் கேள்வியுற்று மனம் வருந்தும் நாம், அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *