கனகராசா கனகேந்திரன்(வண்ணம்)

Visits of Current Page:534
GlobalTotal: 234964

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், மாங்குளம் ஒலுமடுவை வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகராசா கனகேந்திரன் அவர்கள் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் இயற்கை மரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராசா உருக்குமணி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தெய்வானைக்கண்டு, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி, பரமசிவம் அவர்களின் அன்பு மருமகனும்,

கனகேந்திரராணி, பிறேமகுமாரி, பிரேமச்சந்திரன், யமுனாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பொன்னம்பலம், காலஞ்சென்ற அப்பாசாமி, கிரிசாம்பாள், பரமானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சரஸ்வதிதேவி மற்றும் பாலயோகினி ஆகியோரின் அன்புக் கணவரும்,

மாலதி, பானுமதி, சுதாகரன், சுமதி, பாலேந்திரன், திருக்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணாதரன், யசோதரன், அபர்ணா, காண்டீபன், மதிபா, நிவேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவிஷானி, யதுர்ஷானி(சுவிஸ்), யதுஷா, அர்வின், அபிஷன்(பிரான்ஸ்), மதுஷாயினி, கரினி(வவுனியா), டிலக்‌ஷன், கிருத்திகன், திவிஷன்(லண்டன்), ஜஸ்வின், அஸ்வினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-01-2022 புதன்கிழமை அன்று 261/1, 3 ம் ஒழுங்கை, உக்குளாங்குளம் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் கிரியை நடைபெற்று வேப்பங்குளம் தட்சனாமடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 பாலயோகினி – மனைவி

 சுதன் – மகன்

 மாலா, குணா – மகள், மருமகன்

 பானு, அசோகன் – மகள், மருமகன்

 சுமதி காண்டீபன் – மகள், மருமகன்

 பாலா – மகன்

 குமரன் – மகன்

 யமுனா பரமானந்தம் – சகோதரி

அன்னாரின் மறைவையோட்டி துயரத்தில் ஆழ்ந்திருக்கும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்

Leave a Reply