31 ம் நாள் நினைவு அஞ்சலி

சிவபிரகாஷம் குணேசலிங்கம்

(முன்னாள் சுகாதார உத்தியோகத்தர் – Sanitary Inspector)

அமைதியின் உருவமாகவும்
அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பண்பின் பெருந்தகையாகவும்
பாசத்தின் உறைவிடமாகவும்
எம்மத்தியில் அன்பு நண்பனாக
இருந்த உத்தமரே!!
மண்ணோடு உங்கள்
பூவுடல் மறைந்து விட்டாலும்
உங்கள் நினைவுகள் எங்கள்
இதயங்களில் இருந்து
ஒருபோதும் மறைவதில்லை.

நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே
அன்பானவனே உன்
பெயரும் விளங்கும்!!

வார்த்தை தடுமாறுகின்றதே
நேற்றுக் கண்ட உனை நினைத்து
நெஞ்சம் உருமாறுகின்றதே!!இன்று
மங்காத உன் நினைவால்
மயங்கியே நிற்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *