வெந்தயக்குழம்பு செய்வோம் (Venthaya kulampu)

உடல் சூட்டால் வருந்துபவர்களுக்கு வெந்தயக் குழம்பு (Venthaya kulampu) மிகச் சிறந்த மருந்தாகும்.வெந்தயகுழம்பு (Venthaya kulampu) உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு , வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் நீக்கும்.வெந்தயத்தில் குழம்புசெய்து  மாதம் ஒரு முறையாவது சாப்பிடுவதுஅனைவருக்கும்  நல்ல பலன்களைத் தரும்.வெந்தயம் நீரழிவுநோய் உள்ளர்களுக்கு ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது. மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ  அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது.தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும். மத்திய, முற்றிய நிலை நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.வெந்தயத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் இருதய நோய் வருவதை தடுக்க உதவுகிறது. .வெந்தயத்தில் தேவையான பொட்டாசியம் இருப்பதால் இரத்தத்தையும் இருதய துடிப்பும் கட்டுக்குள் வைக்கிறது. மேலும், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை இரத்தில்  குறைக்கிறது.சுவையான வெந்தயக்குழம்பு (Venthaya kulampu) இலகுவான செய்முறை வீடியோவில் பார்க்கலாம்.

வெந்தயம் நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள் போக்குகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் வெந்தயம்  உபயோகித்தால் அதிலிருந்து விடுபடலாம். இரத்த அணுக்களின் உற்பத்தியை வெந்தயம் தூண்டிவிடுகிறது. வெந்தயத்தை முளைக்க வைத்து உபயோகப்படுத்தலாம்.

மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள் அனைத்திற்கும் வெந்தயம் நிவாரணம் அளிக்கிறது. பெண்களுக்கு  சாதாரணமாக ஏற்படும் இரும்புச்சத்து கோளாறை வெந்தயம் போக்குகிறது.

வெந்தயம் சமயலுக்கு மட்டுமின்றி ஆயுர்வேதம் மற்றும் சமயலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நம் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் வெந்தயத்தில் அடங்கியுள்ளது.

வெந்தய குழம்பு  தரும் பயன்கள் (Venthaya kulampu)

உடல் வெப்பத்தை குறைக்கும்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், உடல் வெப்பம் குறையும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும்
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே வெந்தயத்தை சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கும்
அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீல் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும்.
உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள். அவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் உடல் சூடு குறையும்.  
 இதய நோய் வராமல் தடுக்கும்
வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால்,  இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும், மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.
நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்
வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் துண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.
மலச்சிக்கலை போக்கும்
வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

செரிமான பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வெந்தயத்தை சாப்பட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.

அல்சரை குணமாக்கும்

வெந்தயத்தை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரைக் குடித்து வந்தாலோ அல்லது காலையில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வந்தாலோ, செரிமான பிரச்சனைகள், அல்சர் போன்றவை நீங்கும்.

உடல் எடையினை குறைக்க உதவும்

வெந்தயத்தில் எடையை குறைக்கும் திறன் உள்ளது. அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.

இரத்தத்தினை சுத்தப்படுத்தும்

வெந்தயம் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதிலும் கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி, உடல் முழுவதும் இரத்தம் சீராக பாய உதவி புரியும்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *