இலுப்பை எண்ணெய்யின் மருத்துவ பயன்கள்

இலுப்பை மரம்

இலுப்பை மரம் மணற் பாங்கான இடங்களில் நன்கு வளரும். இதன் தாயகம் இந்தியா. ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிதேசம், கேரளா, குஜராத், ஒரிசா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகக் காணப்படும். தஞ்சை, சேலம், வடஆற்காடு, மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில் காணப்படுகின்றன. தெய்வ விருட்சமாக சிவன், விஷ்ணு கோயில்களில் இந்த மரம் வளர்க்கப்பட்டு வருகிறது.இலுப்பை மரத்திற்கு இருப்பை, சூலிகம், மதூகம் என்ற பெயர்கள் உண்டு.

இலுப்பை எண்ணெய்

இந்த மரத்தை ‘தேன் மரமென்றும் வெண்ணை மரம்’ என்றும் சொல்வார்கள். டிசம்ர் ஜனவரி மாதத்தில் இலுப்பை மரத்தின் இலைகள் உதிர்ந்து விடும். ஜனவரி,பிப்ரவரி, மார்ச் மாதத்தில் துளிர் விட ஆரம்பிக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பூக்கள் பூக்கும். ஏப்ரல் மே ஜூனில் பழங்கள் வளரும். ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்தில் 20 முதல் 200 கிலோ வரை விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ விதையை செக்கில் போட்டு ஆட்டினால் 300 ml எண்ணெய் கிடைக்கும். தேங்காய் எண்ணெய்க்கும், நெய்யுக்கும் பதிலாக அந்தக் காலத்தில் இந்த எண்ணெயைதான் அதிகம் பயன்படுத்தினார்கள். இதன் எண்ணெய் மஞ்சள் நிறத்தில் அடர்த்தியாக இருக்கும். இந்த எண்ணையை ஆங்கிலத்தில் ‘mahua oil’ என்று அழைப்பார்கள். இலுப்பை எண்ணெய் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது.

இலுப்பை எண்ணெயின் பயன்கள்

1. இலுப்பை எண்ணெய் கரப்பான், பூச்சிக்கடி நஞ்சு, சிரங்கு, விரணம், கடும் இடுப்புவலி போன்றவற்றிற்கு நல்ல மருந்தாகும்.

2. இலுப்பை எண்ணையை குழந்தைகளுக்கு வரும் மண்டைக்கரப்பான், கை கால்களில் வரும் சொறி, சிரங்கு இவைகளுக்குத் தடவிவர விரைவில் ஆறும்.

3. இலுப்பை எண்ணையை சற்று சூடாக்கி இடுப்புவலி, நரம்புகளின் பலவீனத்தால் உண்டான நடுக்கம், முதலிய பிரச்சனைகளுக்கு அவ்விடங்களில் நன்கு தேய்த்து வெந்நீரில் குளித்துவரக் குணமாகும்.

4. இலுப்பை எண்ணெய்யைக் கொண்டு எண்ணெய்க் குளியல் செய்து வர நாடி நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியம் பெருகும், மேனி மிருதுவாகும். மனத்தெளிவும், சுறுசுறுப்பும் ஏற்படும்.

5. இலுப்பை எண்ணெய்யை உட்கொள்ளும்போது குடல் வறட்சி நீங்கி ஜீரணக்கோளாறு, புளித்த ஏப்பம், வயிற்றெரிச்சல் போன்றவை கட்டுப்படுத்தப்படும்.

6. மலம் கழிப்பதில் பிரச்னை உள்ளவர்கள் இந்த எண்ணையை எடுத்து கொண்டால் மலத்தை இளக்கி வெளியேற்றும்.

7. இலுப்பை எண்ணெய் ஆண்களின் தாது எண்ணிக்கையை அதிகபடுத்தும்.

8. விரை வீக்கம் குணமாக இலுப்பை எண்ணையை சிறிது சூடாக்கி விரல்களின் மீது தடவி வர விரைவீக்கம் குணமாகும். குறைந்தது 4,5 தடவைகள் செய்தால் விரைவில் வீக்கம் குறையும்.

9. சருமம் சருமத்தின் நலனை பாதுகாப்பதில் இலுப்பை எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. இலுப்பை எண்ணையில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போகும் சத்துகள் அதிகம் நிறைந்திருக்கின்றன.

10. இலுப்பை எண்ணையை பூச்சி கடித்த இடங்களில் நன்கு தடவி விடுவதால் உடலில் பூச்சிக்கடியினால் பரவிய விஷம் முறியும். எரிச்சல் மற்றும் வீக்கமும் குணமாகும்.

11. கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தாலும் மற்றும் அதிக நேரம் கண் விழித்து வேலை பார்க்கும் நபர்களுக்கு கண்ணெரிச்சல், கண் வலி போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது தலைக்கு இலுப்பை எண்ணையை நன்கு தேய்த்து வந்தால் தலையில் சேரும் அதீத உஷ்ணத்தை குறைத்து கண்பார்வையை தெளிவாக்கும்.

இதன் இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டது

பால் சுரக்க

தாய்ப்பால் சரிவர சுரக்காத பெண்கள் பலவகையான மருந்து மாத்திரைகளை உட்கொள்வார்கள். இவை சில சமயங்களில் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்புகளை உண்டு பண்ணும். இந்த இன்னலைப் போக்க இலுப்பை உதவுகிறது. இலுப்பை இலையை மார்பில் வைத்துக் கட்டிவர தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

இலுப்பை பூ

இலுப்பைப்பூவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் இலுப்பைப்பூவை தினசரி சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். இரத்தச்சோகை மாறும்.

இலுப்பைப்பூவை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை அருந்தி வந்தால் இருமல், வெப்பத்தினால் உண்டான சுரம் நீங்கும்.

தீரா தாகம், நீர்ச்சத்து குறைபாடு போன்றவையும் நீங்கும்.

இலுப்பைப்பூவை அரைத்து பாலில் கலந்து அருந்தினால் இளைப்பு நீங்கும்.

காய்ந்த இலுப்பைப்பூவை வதக்கி வீக்கங்களுக்கு ஒற்றடமிட்டு வந்தால் வீக்கம் மறையும்.

இலுப்பைப்பூவைக் காயவைத்து இடித்து வெல்லத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டான மாதவிலக்குக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நீங்கும்.

இலுப்பைக் காய்

இலுப்பைக் காயை கீறினால் பால் வெளிப்படும். அந்த பாலை உடலில் தோன்றும் வெண் படலங்களின் மீது தடவினால் வெண்படலம் விரைவில் குணமாகும்.

இலுப்பைப் பழம்

இலுப்பைப்பழம் நல்ல இனிப்புச் சுவை உடையது. மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது.

இலுப்பை விதை

இலுப்பை விதையின் ஓட்டை நீக்கி உள்ளே உள்ள பருப்பை வதக்கி அரைத்து வீக்கங்களுக்கு கட்டினால் வீக்கம் விரைவில் குணமாகும்.

இலுப்பை நெய்(எண்ணெய்)- இலுப்பை பிண்ணாக்கு

இலுப்பையின் விதையில் எடுக்கப்படும் எண்ணெய் உடலுக்கு வன்மையும் வனப்பையும் கொடுக்கும்.

எண்ணெய் நீக்கப்பட்ட சக்கையே பிண்ணாக்கு எனப்படும். இதை ஊறவைத்து நன்றாக அரைத்து வடிகஞ்சியுடன் சேர்த்து உடலில் தேய்த்துக் குளித்தால் சரும வியாதிகள் நீங்கும். பழங் காலங்களில் இதனையே நம் முன்னோர்கள் பலர் சோப்பிற்குப் பதிலாக உபயோகித்து வந்துள்ளனர்.

இலுப்பை வேர்

இலுப்பையின் வேரை இடித்து நீரில் கலந்து கொதிக்கவைத்து குடிநீராக அருந்தி வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *