அடர்த்தியான கருகரு கூந்தலுக்கு அரிசி கழுவிய தண்ணீர் – நன்மைகள் & பயன்படுத்தும் முறைகள்!

அடர்த்தியான கருகரு கூந்தலுக்கு அரிசி கழுவிய தண்ணீர் –  நன்மைகள் & பயன்படுத்தும் முறைகள்!
அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய தண்ணீரை வீணாக்காமல் கூந்தல் வளர்ச்சிக்கும், சருமத்தை அழகு படுத்துவதற்கும் பயன்படுத்தலாம். 
ஜப்பான் மற்றும் சீனாவில் அரிசி கழுவிய நீரை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதை வைத்து பல்வேறு அழகு சாதனப் பொருள்களும் சந்தையில் விற்கப்பட்டு வருகிறது. 
அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை(Elasticity) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. 
அரிசியில் உள்ள ஸ்டார்ச் எனும் மூலக்கூறு தண்ணீரில் ஊற வைக்கும்போது 80 % உறிஞ்சப்படுகிறது. அந்த நீரில் விட்டமின் B , E ஆண்டி ஆக்ஸிடண்ட், பல மினரல் சத்துகள் ஆகியவை அடங்கியுள்ளன. அதனால்தான் ஆராய்ச்சியாளர்களே அதன் உண்மைத் தன்மையை சோதித்து உறுதி செய்துள்ளனர்.

அரிசி தண்ணீர் என்பது தமிழ்நாட்டைப் பொருத்தவரை அரிய வகைப் பொருள் அல்ல.  அதற்காக நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தினமும் வீட்டில் சமைக்க அரிசி குறைந்தது அரை மணி நேரம் அல்லது 15 நிமிடங்கள் ஊற வைப்போம். 

அந்த தண்ணீரை இனிக் கீழே ஊற்றாமல் பத்திரப்படுத்தி உங்கள் தலைமுடிக்கு மசாஜ் செய்து தலைக்குக் குளியுங்கள். இல்லையெனில் தலைக்குக் குளித்தபின் இறுதி நீராக இந்த அரிசி தண்ணீரை (rice water) ஊற்றி அலசுங்கள்.

நீங்கள் வழக்கமாக செய்வது போல் உங்கள் முடியை ஷாம்பு மற்றும் கன்டிசனர்களைப் பயன்படுத்திக் கழுவிய பின்னர் இறுதியாக அரிசி ஊறவைத்த நீரை பயன்படுத்தி முடியை கழுவ வேண்டும். 

இதில் இந்த நீரை 12 முதல் 24 மணி நேரம் வரை சாதரணமாக பாத்திரத்தில் வைத்துவிட்டு பின்னர் பயன்படுத்தினால் நல்ல பலனைத் தரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து இப்படிச் செய்து வருவதன் மூலம் முடி ஆரோக்கியத்துடனும், போஷாக்குடனும் வளரும். 

அதேபோல் இந்த ஊற வைத்த அரிசி நீரைப் புளிக்கச் செய்து அதில் கொஞ்சம் நீர் கலந்து தலைக்குத் தேய்த்தாலும் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். நீங்கள் தலைக்குக் குளித்தபின் இறுதியாக இந்த தண்ணீரை தலையில் ஊற்றி அலசினால் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு தேவை என்றால் வாசனைக்கு அந்த நீரில் வாசனை எண்ணெய் கலந்து கொள்ளலாம். 

கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.

இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

அரிசி தண்ணீர் பெற அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அரிசியை சுத்தமான நீரில் (rice water) 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டவேண்டும். 

பின்னர் அந்நீரால் (rice water) முகத்தையும், கூந்தலையும் பராமரிக்கலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும்.

அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். 

Rice Water for Hair: How to Make It and Benefits | Healthy natural hair  growth, Healthy hair tips, Healthy natural hair

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *